உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 431 365 மேலெழுந்து, திண்ணிதாய், வடக்கிலுள்ள மேருமலை போல வளருவதாய், மோகத்தை ஊட்டுவதான, கொங்கை அசையும்படி வந்து (தங்கள்) உடல் கொண்டு (உடல் நலத்தைத் தந்து) - மோசம் செய்கின்ற (பொது மகளிரின்) மாயையில் முழுகி, மூடத்தன்மை யென்னும்படியான அறிவைக் கொண்ட காரணத்தால் (உயிரைப்) பிரிக்க வரும் யமதூதர்கள் கயிறுகொண்டு என் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல் (அடியேனுக்குக்) காவலாக நீ விரைவாக ஓடி வந்து உன்னுடைய அடிமையாகிய (நான்) காணும்படி நீ வருவது இனி எந்த நாளோ! ஆதிமறையவனாகிய பிரமனும், திருமாலும், பெரிய சுடலையில் ஆடும் அரனும் ஆக இவர் மூவரும் ஒன்றதான தாய், குற்றமற்றவள், முத்தலைச் சூலமேந்தினவள் குமரி மகமாயி, கவுரி, உமை ஈன்ற செல்வமே ! சோதியாகிய ஒளிக் கிரணங்கள் வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள மலைமீது, உந்தி (ஆறும், அல்லது நீரும்) நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள விராலி நகரில் பொலிந்து வீற்றிருக்கும் தம்பிரானே! தோகை மயில்மேல் உலவும் தம்பிரானே! (காண வருவதினி எந்த நாளோ!)