உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 449 சிலருக்கு அப்பொழுதே (தாமதமின்றிக்) கதி அளிக்கும் (வீடு பேறு அருளும்) குருமூர்த்தியே! அழகிய, செவ்விய கோபுரம் வாய்ந்துள்ள வயலூரனே! (நீ) காத்தளிக்கும் (இப்) பூமி யிடத்தே மதிப்பு (சிறப்பு) ஓங்கி விளங்கும் திருச் செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே! (தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே). 373 சோர்வு உற்றது போலச் சுழற்கண் காட்டி (கண்ணைச் சுழற்றிக் காட்டி), கொங்கைகள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, விளக்கம் (தங்கள் பிரதாபம் - கீர்த்தி) சிறப்புடன் ஓங்கத் திரிகின்ற மாதர்களின் கோவைக் கனி போன்ற வாயிதழின் கரும்பின் சாரம் போன்ற ஊறலைத் தந்து அணைத்துச் சேரும் கொடிய துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களிற் சுழன்று திரியாமல். o - ■ - தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், ஒன்று சேரச் செய்து பசுவின் கன்றுகளை மேய்த்திட்ட திருமாலுக்கும், யமன் வாட்டமுற்று மாயும்படி (இறக்கும்படி செய்த) சிவபிரானுக்கும் காண்பதற்குக் கிடையாத நீ என்னைக் கண்டு (நான் ஒருவன் இருக்கின்றேன் என்பதை அறிந்து), என்மீது விருப்பம் வைத்து, பொருட் கொண்டாட்டத்து (கொண்டாடத்தக்க பொருள் அமைந்த) இன்ப உபதேச வாக்கியத்தை அடியேனும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து உனது திருக்கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ!