உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/926

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 453 374 கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், நீண்ட நீளமுள்ளதாய்ப் பந்து ஆடுவது போல அங்கும் இங்கும் புரள்கின்ற கண்களை உடையவர்கள், பளிங்குபோல வெண்ணிறத்த பற்களும், கறுத்த அழகிய வில் போன்ற புருவமும், ஆசையின் (பொன்னாலாகிய) தோடு என்னும் அணிகலன் அசைகின்ற கொண்ட முகம் என்னும் தாமரையும், விளங்குபவர்கள், பேசி நிறையும் பேச்சுக்கள் (நேர் சுகம் போல . சுகம்போல நேரும்) கிளியின் மொழியை நிகர்ப்பவர், கமுகை ஒக்கும் கந்தாரர் (கந்தரத்தினர்) கழுத்தினர் தோள்கள் பொருந்திய தேமலொடு, வாசனை கொண்டு மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர்; மலை இரண்டு போலவும், நீண்ட யானைக் கொம்பு, இளநீர், தேன் போன்று இனிக்கும் முத்து மாலை அணிந்த கொங்கையர், நீண்ட, அலங்காரமான, (கண்ட) சரம் - கழுத்து அணியோடு கூடினவர்கள், பொருந்தி மிக்க நறுமணச் சாற்றினைப் பொழிகின்ற (கலவைச் சந்தனம் உள்ள) அந்தவள்ளம் கிண்ணம் போன்ற கொங்கையர், மலர்களுள் (காமபாண மலர்களுள்) நீலோற் பலப் பாணத்தை ஏவின நல்ல மன்மதனது இறுமாப்பு நிறைந்துள்ள அன்புக்கு இடமானதும், சந்ததியைத் தருகின்றதுமான அல்குல் என்கின்ற காம நிதியாம் அமுதத்தை உதவும் சம்போகத்தினர் (புணர்ச்சி அனுபவத்தைத் தருபவர்); இடையானது நூல் போல நுண்ணியதாய், விளங்கி, திக்குகளில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்றவர்கள், زDG%/9ئے (முன் பக்கத் தொடர்ச்சி) tt காம பண்டார அல்குல் (திருப்புகழ் 619), போக பண்டாரபணி (திருப்புகழ் 390)

  1. ஆசை உயிர் சம்பையார் - திக்குக்களில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்ற இடையை யுடையவர்கள்.

SS அம்சாலு - அழகு நிறைந்த