உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பிற்பால் பட்டே நற்பால் பெற்றார் முற் பாலைக்கற் பகமேதான்; tசெச்சா லிச்சா லத்தே ஹிச்சே லுற்றா னித்துப் பொழிலேறுஞ்: #செக்கோடைக்கோ டுக்கே நிற்பாய் நித்தா செக்கர்க் கதிரேனல், முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள் முத்தார் வெட்சிப் புயவேளே . முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. (11)

  • பாலைக் கற்பகம் - பாலை நிலம் என்பது நீண்டு அகன்ற மணல் வெளி, நீரும் நிழலும் இல்லாத சுரமும் சுரம் சார்ந்த இடமும் சுரம் காடு - அத்தகைய இடத்தில் குளிர்ந்த நிழல் நீர் முதலியன யாவும் தரும் கற்பக விருட்சம் போல, முருகனே நீ நற்பால் (நல்ல குணம் ) பெற்றவர் முன்பு தோன்றி உதவுவாய்;.

"அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல் மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல் பல்லார் பயன் துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லான் மகற்குக் கடன்" - என்னும் நாலடியாரும் (202), 'நிழலின் நீளிடைத் தனிமரம் போல. இரவலர்க் கியும் வள்ளி. யோன்" என்னும் புறநானூற்று (119) அடியும், "அருஞ் சுரத்தின் மரம்போல அடைந்தார்க் களித்தல் அவற்கியல்பு". எனவரும் நச்சினார்க்கினியர் உரையும் (சிந்தாமணி - கடவுள் வாழ்த்து 3ஆம் பாடல் உரை) முருகன் பாலைக் கற்பகம் - என்றதின் பொருளை நன்கு விளக்கும். குறிப்பு: இந்தத் திருப்புகழால் - முதலிற் பிழையுள்ள நெறியில் இருந்தாலும் பின்னர் அப்பிழையை உணர்ந்து அடியார் கூட்டத்தில் இணங்கி நல்ல நெறியைக் கைப்பற்றினவர்க்கு முருகன் பாலை நிலத்திற் காணும் கற்பக விருட்சம் போல நல்லருள் புரிவார் என்னும் பேருண்மையைத் தமது அநுபவத்தினின்றே அருணகிரியார் விளக்குகின்றார். நன்னெறி காணாது (அடுத்த பக்கம் பார்க்க) 30