பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 467 பின்பு, பால் பட்டே (தகுதியான நல்ல வழியில் நின்று) நற்பால் பெற்றார் முன் நல்ல குண ஒழுக்கத்தைப் பெற்றவர்களிடத்தே (பெற்றவர்களுக்கு) - நீ - பாலைக் கற்பகமே தான் - பாலை நிலத்திற் கிடைத்த தெய்வ விருட்சமாம் கற்பகம்ே தான் (கற்பக விருட்சத்தையே நீ நிகர்ப்பாய் - அந்த விருட்சம் போல அவர்களுக்கு நீ வேண்டிய வரத்தைத் தந்து அவர்களைக் காப்பாற்றுவாய்); செம்மையான நெற் கதிர்க் கூட்டத்தில் ஏறிச் சேல் மீன்கள் ஆணித்துப் பொழில் (அணித்துப் பொழில்) அண்மையில் (சமீபத்தில்) உள்ள் சோலையிற் போய்ச் சேரும் திருச்செங்கோட்டு மலையிலேயே நிற்பவனே! (விளங்கி நிற்பவனே) என்றும் அழியாது இருப்பவனே! சிவந்த கதிர் கொண்ட தினை மூன் போகம் விளையும் நெல் வயலில் - நெற் கதிர் இேை. தாள்கள் (அடித் தண்டுகள்) கொண்ட வெற்பாள். (வள்ளி மலைக்கு உரியவளாம் வள்ளியின்) முத்து (முத்தம் - அல்லது முத்து மாலை) ஆர். நிறைந்துள்ள புயத்தை உடைய வேளே வெட்சி மாலை அணிந்த புயவேளே! முத்தனே (முத்திநிலையில் உள்ளவனே)! முத்தி அத்தா (காருக புத்தியம், ஆகவனியம், தட்சிணாக்கினி என்ற) மூவகை வேதாக்கினிக்கும் தலைமைக் கடவுளே! அத்தனே! சுத்தனே! முத்துப் போன்ற அருமையான (மேலான) முத்தியை (அளிக்கும்) பெருமாளே! (நீ பாலைக் கற்பகமே தான்) (முன் பக்க தொடர்ச்சி) தவிக்கும் நமக்கு இப்பாடல் நல்லறிவு ஊட்டும் அருமைப் பாடலாகின்றது. 'முருகனைப் பாலைக் கற்பகம்’ என்பது மிகவும் பாராட்டத்தக்க சிறப்புப் பெயராய்ப் பொலிகின்றது" எனது கட்டுரை அமிர்தவசனி மலர் 5, இதழ் 4 (1953). t செச்சாலிச் சாலம் - செந்நெற் கூட்டம். :செக்கோடைக் கோடுக்கே- திருச்செங்கோட்டு மலையினுச்சியில்.