உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை l, 473 ஞான தேசிகனே! சற்குருவே! உத்தமனே! வேலவனே! நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே! நாகமாமலை (சர்ப்ப்திரி) என்கின்ற திருச்செங்கோட்டில் புகழ் பெற விளங்கி நிற்கும் ஒப்பற்ற பெருமாளே! (மலச் சனனத்தில் உழல்வேனோ) 380 யமனுடைய ஊரை அணுகா வகைக்கும் - பூமியிற் பிறவா வகைக்கும் நல்லொழுக்கம் வாய்ந்த அகத்தியர்க்கு நீ உபதேசித்ததான ஞானோபதேச அமுதைத் - தேன் போன்ற உபதேச அமுதை (அடியேனுக்குத் தந்தருளுக திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே! சிவந்த தவ சிரேட்டர்களை விட்டுப் பிரியாதவனே! நான்கு மறைகளின் பொருளாயுள்ளவனே! - நாககிரி எனப்படும் திருச்செங்கோட்டுப் பெருமாளே! - (ஞான தேனமுதைத் தருவாயே) 381 மாலையை உடையவனே! சுக சம்பாடணை உள்ளோனே! உலகுக்கு ஆதாரமாயுள்ளவனே! தாரம் தரணி ஈசா! நீர், மண் (ஆதிய பஞ்ச பூதங்களுக்கு) ஈசனே! தானம் (கொடை அளிக்கும்) ஆசார (ஒழுக்கமுள்ளவர் களால்) பாவா (தியானிக்கப் படுபவனே): "ப்ாவ நாசனே! பாசங்களிற் பற்று வைத்ததின் அபராதமாக (முன் பக்கத் தொடர்ச்சி) என்னும் பாட்டு திருச்செங்கொட்டு மலையின் பாம்புருவத்தை விளக்குவதாகும். கொங்கு மண்டல சதகம் (50 - குறிப்புரை) S தாமா - மாலையை யுடையவனே. 1 தாம ஆலாபா - சுக சம்பாடணை யுள்ளோனே.