பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/953

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 'செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக * மறவேனே, கத்திய தத்தைகளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி தினைகாவல். கற்றகு றத்திநி றத்தக முத்தடி கட்டிய னைத்தப னிருதோளா. சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட மறைநூலின். தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்ப கிரிச்சுரர் பெருமாளே. (18) 385. நிலைத்த பத்தியைப் பெற தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தனதான t புற்புதமெ ணாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு மனையாளும். புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத பெருவாழ்வு: நிற்பதொரு கோடி #கற்பமென மாய ட்டையுடன் வாழு மடியேன்யான். செய்ப்பதி வைத்து" என்றும் பாடம். இந்தப் பாடத்துக்குத் திருப்புகழ்ப் பாடல்களில் செய்ப்பதி வரும்படியாக வைத்து என்றாவது (விநா. திருப்புகழ் 3), வயலூரில் வைத்து (வயலூரில் எனக்கு அனுக்கிரகித்து) என்றாவது பொருள் காண வேண்டும். திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே" என்றார் பிறிதோரிடத்தாதலின் (திருப்புகழ் 105-பார்க்க). அண்ணாமலையில் மெளனோபதேசத்தையும் (திருப்புகழ் 515), வயலூரில் திருப்புகழ்க் கவித்துவக் கீர்த்தியையும் (திருப்புகழ் 135) அருணகிரியார் பெற்றனர் என்பது அவர் திருவாக்கினாலேயே பெறப்படுகின்றது. (அடுத்த பக்கம் பார்க்க)