உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 481 சொல்லும்படியாக வைத்தும், (அந்தப் பாடல்கள்) - உலகில் பர்வும்படியாக வெளிப்படுத்தியும் (நீ) அநுக்கிரகம் புரிந்ததை மறவேன்; கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி, சுழற்றும் கவனில் (கல்லெறியும் கருவியில்) கல்லை வைத்து எறிந்து தினைப் புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி (வள்ளியின்) ஒளி பொருந்திய கழுத்தின் அடியிற் கட்டி அணைத்த பன்னிரு தோளனே! சத்தியை (பராசத்தி பார்வதியை) பொருந்தும்படி இடது பாகத்தில் வைத்த தந்தையாம் (சிவன்) மெச்சும் படியாக மறை நூலின் (வேத நூலின்) தத்துவம் (உண்மைப் பொருள்), தற்பரம் (பரம்பொருள்) ஆகிய எல்லாவற்றையும் போதித்து விளக்கிய பெருமாளே! சர்ப்பமலை என்னும் திருச்செங்கோட்டுப் பெருமாளே தேவர் பெருமாளே! (அநுக்கிரகம் மறவேனே) 385 நீர்க் குமிழி என்னும் பேர்படைத்து, சிறிதளவும் நில்ைத்திராத பொய்க் கடிசையான (இவ்வுடலுடன்) குலவுகின்ற மனையாளும். - புத்திரரும், விடும், நண்பர்களும், ஆன சூழலில் புத்தி சோர்வு அடையாமல் (இவ்வாழ்வு) பெருவாழ்வு, இது (நிலைத்து) நிற்ப ஒரு கோடி காலம் என்னும் மாயம்யக்கத் தியர்ன் நிலையில் வாழுகின்ற அடியேனாகிய நான் (முன் பக்கத் தொடர்ச்சி) t புற்புதம் நீர்க் குமிழி,

  1. கற்பம் - பிரமனது ஒரு நாள் (நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடங் கொண்டது பிரமனது ஒருநாள்).