உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத நினைவாயே! சற்பகிரி நாத முத்தமிழ்விநோத சக்ரகதை பாணி மருகோனே. tதர்க்கசமண் முகர் மிக்ககழு வேற வைத்தவொரு காழி மறையோனே; கற்புவழு வாது வெற்படியின் மேவு கற்றைமற வாணர் கொடிகோவே. கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் பெருமாளே. (19) 386. திருவடி பெற தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் தனதான பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் திளைஞோர்கள். புட்பட்டுச் செப்பத் துப்பற் கொத்தப்பொற் றித்தத் திட்பப் பொற்பிற்: பெற் றுக்ரச் சக்ரத் தனமானார்; கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் திரியாமல்.

  • முத்தமிழ் விநோத - தமிழ்த்ரய விநோதக் கலாதரனும் . வேடிச்சி காவலன் வகுப்பு. தமிழ்த்ரய விநோதக்காரன் - வேளைக்காரன் வகுப்பு. முத்தமிழ் வித்வ விநோதா கீதா - (திருப்புகழ் 838) _ t சமணர்கள் தோல்வியுற்று வாயிழந்தாராதலின் மூகர்’ எனப்பட்டார். அவர்கள் கழு ஏறின வரலாற்றைப் பாட்டு 181 கீழ்க்குறிப்பிற் பார்க்க # பெற்றுக்ர - பெற்ற உக்கிர.