உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/960

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை 487 387 கொடியவனான யமனும் அவனுடன் வந்த கடகமும் (படையும் சேனையும்) இறந்துபோம்படி, ஒரு நாள் உனது இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் (இந்த) மழலைச் சொல் பேசும் அடியவன் குழந்தை அடியானாகிய நான்) உன்னுடைய திருவருளையே துணையாகக்கொண்டு சண்டை யிடும் போரினைப் பார்ப்பதற்கு குறவர் மகளாம் (வள்ளி) அணையும் புய மலைச் சமூகமும் (பன்னிரு புயத்திரளும்), ஆறு திருமுகங்களும், பலவான (பன்னிரு கண்களும், இரவி (சூரியனை) உமிழ் (கூவி வெளிப் படுத்தும் வரவழைக்கும்) கொடியாகிய கோழியும் ஆக எல்லாம் பிரத்தியட்சமாக, பத்துத் திசைகளையும் (அல்லது பெரிய திசைகளாம் எட்டுத் திசைகளையும்) பூமியையும், பெரிதாய் உள்ள ஏழு கடல்களையும், பழைய சக்கரவாளக் கிரியையும் வலம்வர வேண்டுமென்றாலும் வலம் வரத் தக்கதாய் வலம் வந்த ஒப்பற்ற பச்சைக் குதிரை (மயிலின்) மேல் ஏறி பழைய அடியார் கூட்டம் தேவர் கூட்டம் (ஆகிய இரு கூட்டமும்) இரண்டு பக்கத்தி லும் வர மிக்கெழுந்த ஓசையுடன் தமிழ்கொண்டும், மறை கொண்டும் போற்ற (அடியார் தமிழ் கொடு போற்ற, இமையவர் மறை (வேதம்) கூறிப் போற்ற), அன்று அடியேனை ஆட்கொள்ள (அருணையில்) வந்தது. போல ஒருமுறை வந்தருளவேண்டும், (யமனொடு அடியேன் செய்யும் போரினைக் காண வரவேணும்) சடாபாரத்தைத் தரித்தவரும், நஞ்சை உண்டு கண்டத்தில் தரித்தவரும், பாம்பைத் தரித்தவரும் மேலான மழு ஆயுதத்தைத் தரித்தவரும், சந்திரனைத் தரித்தவரும், பரிசுத்தத்தை உடைய வரும், விதம் விதமாக ஒலிக்கும் டமருகத்தையும் (உடுக்கை யையும்), மிருகம் (மானையும்) தரித்தவரும், வனி (வன்னி) அக்கினியை (கரத்தில்) தரித்தவரும், சிரமாலைகளைத் தரித்தவரும் பாரமான,