உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கதகமலை திருப்புகழ் உரை - 525 கநக மலை 400 மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து உலகு நெறியில் அதிகமாக மருட்சி (மோகம்) கொண்டு, அசடன் எனப் பிறர் கூற மனம் வேதனைப்பட்டுச் சோர்வு அடையாமல் தினந்தோறும் களிப்பு மிக்கு சுக வழியிலேயே விருப்பம் கொண்டு நடந்து பாவ வழியிற் செல்ல விரும்பும் (அந்த) ஒரு புத்தியை நீக்கமாட்டேனோ! சூரியன், சந்திரன் இரண்டும் பூரண ஒளியுடன் நின்ற அந்த தன்மையை ஒப்ப, விளங்குகின்ற உனது பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு (அக்காட்சியை மனத்தில் நிறுத்தி, என் மனத்திலுள்ள) துயர் முழுமையும் நீங்கப் பெற்று, உள்ளத்தில் அன்புடனே உன்னைத் துதித்து, (எல்) ஒளி பொருந்திய உனது திருவடியிணை மிசை வணங்குதற்கு அருள்புரிவாயாக. போரில் பின்னிட்ட (அல்லது விளங்கின) அசுரர்களின் பெருமை குறைய, சிறந்த மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலுசி லென்று கடல் கலங்கப் பலமுள்ளதும், வெற்றியை உதவுவதுமான, மலர் போன்ற திருக்கரத்தில் விளங்கும் கூர்மை கொண்ட சத்திவேலைப் பிரயோகிக்கும் (வலிமை அல்லது) பெருமை வாய்ந்த இளையோனே!