உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை கருணைபொழி கிருபை முந்தப் 'பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் திருமார்பா. கரிமுகவர் தமைய னென்றுற் றிடுமிளைய குமர பண்பிற் கநககிரி யிலகு கந்தப் பெருமாளே (1) புகழி மலை (திரிசிராப்பள்ளி மாவட்டம் புகலூர் புகைவண்டி நிலையத்திலிருந்து 2 மைல். பாலசுப்பிரமணியர்) 401. மயில்மேல் வந்தருள தனணதன தான தனணதன தான தனணதன தான - தனதான மருவுமலர் வாச முறுகுழலி னாலும் வரிவிழியி னாலு மதியாலும். மலையினிக ரான இளமுலைக ளாலு மயல்கள்தரு மாதர் வகையாலும், கருதுபொரு ளாலு மனைவிமக வான கடலலையில் மூழ்கி அலைவேனோ. கமலபத வாழ்வு தரமயிலின் மீது கருணையுட னேமுன் வரவேணும்; அருமறைக ளோது பிரமன்முதல் மாலும் அமரர்முநி ராசர் தொழுவோனே. கவுரி பரிவினோடு முருகனோடு கொஞ்சுதல் பரிவினொடு கோசலை புகல வருமாயன்"- என்பதனை நினைவூட்டும் (திருப்புகழ் 74)