பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1014

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டிகுடி) திருப்புகழ் உரை 455 836. பெருகி வளரும் (சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றம் என்னும்) ஐந்து புலன்களும் என்னை இழுத்துக்கொண்டு ஒட அவ் வழியே நான் ஒட ಫೆ. இன்பம் கொண்டு அயர்ச்சி (தளர்ச்சி) கொள்பவனாகிய எனக்கு ஒம் என்னும் பிரணவப் பொருள் ஆகிய மந்திரங்களை உபதேசித்து அடியேனை ஆண்டருளுக; (வாங்கி) வில்லை வளைத்து, (வெங்கனை) கொடிய அம்புகளைக் கொண்ட, (சூரர் குலம் கொம்புகள் தாவி) - சூரர்களாகிய சிறந்த வீரக் கிளைஞர்கள் பாய்ந்துவர - (அல்லது, வில்லைவளைத்துக் கொடிய அம்புகளைச் சூரர்களின் சிறந்த கூட்டங்களின்மீது-கடாவி - செலுத்தி) (வாங்கி நின்றன) வளைந்து நின்ற (சேனை) மீது நிரம்பப் பிரயோகிக்கும் குமரேசனே! அல்லது (ஏவில் உகைக்கும்) அம்புகொண்டு செலுத்தின குமரேசனே! மூங்கில் போன்ற அழகிய புயங்களை உடைய நறுமணமுள்ள குஞ்சரி மானும்) யானைமகள் == தேவசேனையும். காதல் மூண்டெழ நீ சென்று உறவாடிய (அல்லது பக்தி மூண்டிருந்த) அழகிய குறமாது வள்ளி மணந்த (அல்லது வள்ளியை) மணந்த திருமார்பனே! (காங்கை) வெப்பம் - மனக்கொதிப்பு - அங்கு (அற்ற) - இல்லாத (பாசு) பாசங்கள் - ஆசைகள் இல்லாத மனத்தராகிய அன்பர்களின் செல்வமே! (காஞ்சிரம் குடி) எட்டிகுடி என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகத்து எம் பெருமாளே! (எமதாறுமுகப் பெருமாளே) (எந்தனை ஆள்வாய்) 837. கடல் போலவும், விஷம் போலவும், அம்பு போலவும், மான் போலவும், மீன் போலவும், தாமரை மலர்போலவும் உள்ள கண்ணை உடைய மாதர்களின்