பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1066

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பந்தணைநல்லுர்) திருப்புகழ் உரை (856) 507 உயிர்களுக்கு வதை புரிந்த உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்கி அடங்க, வெற்றி கொண்ட (அல்லது உலகை வலம்வந்த) செம்பொன் மயில்மீது விளங்கும் வீரனே! பக்கத்திலுள்ள தேவி - பார்வதியுடன் ரிஷபவாகனத்தைச் செலுத்தும் அமலன் - குற்றமற்ற சிவன் ப்ரியப்படும் குழந்தையே! அருள் நிறைந்த பந்தனை நல்லூர் என்னும் தலத்தில் (வள்ளி தேவசேனை என்னும்) இரண்டு தேவிமார்களின் படுக்கை இன்பத்தை அனுபவிக்கும் பெருமாளே! (நடஞ்செய் கழல் தாராய்) 856. (எகின் இனம்பழி) அன்னப் பறவைகளின் கூட்டத்தைப் பழிக்கவல்லவராய் நாடகம் நடிப்பவர்கள் (நடை முதலிய பாவனைகளில்) மயில் என்று சொல்லத்தக்க செயலினை உடையவர்கள், பாம்புக்கு ஒப்பான அல்குலைக் கொண்டவர்கள், (இசை) பண்களைக் காட்டும் குரலினை உடையவர்கள், கடன் கொள்ளுபவர்கள், மிக்க மோகம் கொண்டுளோம் என்பவர் போல (மேலே) விழுபவர்கள், கொங்கைமேல் ஆடை அலையும்படித் திரிபவர்கள், யாரா யிருந்தபோதிலும் இரங்குபவர்போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச் சுழற்றுபவர்கள், விலைக்கு (உடலை விற்கும்) வேசியர் - காம வலையை வீசுகின்ற தீமையைத் தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி நான் மோகம் கொண்டு (அவர்கள் வீசினவலையில்) விழ, அதனால் பின்னர், ராகம் (ஆசை), நோய், பிணி இவைகளை நிரம்பக்கொண்டு நாயனைய அடியேன் இனிமேலும் அலைச்சலுறாமல் அமுதம் அனைய (ஆறெழுத்து) மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, (நான்) அன்பு கூடிய மனத்துடனே (உன்னை) முருகா என்று சொல்லும்படியான திருவருள் எனக்குக் கூடுமாறு கழல் அணிந்த உனது திருவடியைத் தந்தருளுக.