பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 707 தடுமாறுதல் - தடுமாற்றம் அடைதல் - சஞ்சலம் உறுதல் கொஞ்சமேனும் ஒருநாள் கூட இந்த உலகத்தில் நீங்காத என்றும் சஞ்சலத்துக்கே இடமான - (இந்த) உடம்பை உடைய அடியேன். (பசு) தற்போதத்தையும் - அகங்காரத்தையும், (பாசம்) பந்தங்களையும் விட்டு, ஞானத்தால் (அறியப்படு) அறியப்படுகின்ற பூரணமானதும், உருவமில்லாததுமான (பதிபாவனை) - பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு அனுட்டித்து, (அநுபூதியில்) அந்த அனுபவ ಕ್ಲ! (அப்படியே) மறுபடி மீளாவண்ணம் (என் சிந்தனை மாறாதவண்ணம் - அந்தத் தியான நிலையிலேயே) என்னை ஒப்படைத்துச் சேர்ப்பித்து அருள்புரிவாயாக, (அசலேசுரர்) (கயிலை) மலைக் கடவுளாம் சிவன து புத்திரனே (அல்லது - அசைவற்றிருக்கும் ஈசனாம் - தானுவாம்-சிவனது புத்திரனே) குணதிக்கு கிழக்குத் திசையில் தோன்றும் (அருணோதய உதய சூரியனது ஒளிபோன்ற ஒளியை உடையவனே! முத்தமிழ்க் கடவுளே! சகல ஆகமங்களிலும் வல்லவனே! குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்னும் அழகிய ப்ரதேசத்தில் வீற்றிருப்பவனே! உள்ளங் கசிபவர்களுடைய மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே! (மதுபம்) வண்டு மொய்க்கின்ற தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமனுக்கு மைத்துன முறையில் உள்ள வேளே! அன்னதோர் இலிங்க மூர்த்திக் கசலேசன் என்னும் நாமம், உன்னருந்தவத்தின் மிக்கிர் உலகினிற் பொலிந்த தன்றே" -(திருவாரூர்ப் புராணம் - அசலேசச் சருக்கம்) 28, o " கதிராயிர அருணோதய" - திருப்புகழ் 913, "ஞாயிறு கடற் கண்டாஅங் கோவற இமைக்கும் சேண் விளங்கவிர் ஒளி" - திருமுரு சதகோடி சூரியர்கள் உதய மென. சோதி - சீர்பாத வகுப்பு.

  • கருதுவார் இதயத்துக் கமலத் துறும் தேனவன் காண்" "உருகுமணத் தடியவர்கட் கூறுந் தேனை" அப்பர் 6-87-1 6-84.3. 11 பிரமன் மைத்துன வேள் - பாடல் 823-பக். 422 கீழ்க்குறிப்பு.