பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1320

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக்கொளியூர்) திருப்புகழ் உரை 761 (பொய்க்கலி போமாறு) கலியின் பொய்ம்மை (அசத்திய) நிலை நீங்குமாறு, இறைவனுடைய திருவருளின் மெய்ம்மை நிலை சீரோங்கி-புகழோங்கி விளங்கினதுமான திருப்புக் கொளியூர் என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. (உன் அற்புத சீர்பாத மறவேனே) 951. மதம் பெருகுவதற்கு இடமானதும், விசாலமானதுமான (கபோலமும்) கதுப்பும் (மதம் பாயும் இடமும்), முன் புறத்தில் (சன்ன ஆடையும்) நுண்மையான முகபடாமும். (ஒடை) நெற்றிப் ப்ட்டமும், மரு (வாசனை பொருந்திய) பச்சைக் கற்பூரம் கூடிய (இலேபம்) பூச்சு (கலவையைக்) கொண்ட (லல்ாடமும்) நெற்றியும் (மஞ்சையாரி) மஞ்சை - யானையின் முதுகை - முதுகில் ஆரிபொருந்தும்படி வயிற்றில் இடுகின்ற செல்வச் செழிப்பைக் காட்டும் (பாணியும்) பறையும் (முரசும்), (மிதல்) மிதத்தலைக் காட்டும் மிகவும் சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் செலவும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட கழுத்துக் கயிறும் இவையெலாம் பொருந்திய அழகிய கோலத்தைக் கொண்ட வெள்ளையானை (ஐராவதத்தின்) மீது ஏறி பவனி வந்தும்,႔မ္ဘိန္တံ' செழிப்பு உற்ற கற்பக விருகூடி நீழலில் அமைதிய்ா ந்தும், விஷத்துர்க்கன. (விஷம்) விடம், துர்க்கம், அன்ன - (விடம்) மலை, (துர்க்கம்) மலைக் கோட்டை, (அன்ன) போன்ற - மலைக் கோட்டை போன்றனவும், (சூளிகை) - நிலா முற்றங்களை உடையனவு. மான (மாளிகை) அரண்மனைகள்ை உடைய தேவேந்திர லோகத்தில் பொன்னுலகத்தில் "சிந்தையின் ஒழிக்கும் செலவிற் றாகி * இந்திரன் களிற்றொடிணைந்துடன் பிறந்த இரும்பிடி - பெருங்கதை 1-42-215-19. # மணி - கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானை" - புறநானூறு 3. புரோசம் - புரோசை - யானை கழுத்திலிடும் கயிறு - 'மணியும் புரோசையும்" "விக்குறு புரோசை" -பெருங்கதை 1-53-33; 1-49-12,