பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரூர்) திருப்புகழ் உரை 769 உலக முழுவதையும் ஆட்சி செய்யக்கூடியதுமான ஒர் (ஒப்பற்ற) உபதேச மொழியொன்றை (எனக்கு) உபதேசித்தருளுக; உலகோர்க்குத் தலைவனான சிவனது குமாரனே! (அல்லது உலகோர்க்கு (இறை) தலைவனே! சேயே செவ்வ்ேளே) பாலா - இளையோய், மலையரசே குறிஞ்சிவேந்தே)! புகழாற் பெரியவனே!-பேரூர்ப் பெருமாளே! (ஒர்வாக் கருள்வாயே) 954. மை பூசியுள்ளதும், (சரோருகம்) தாமரை போன்றதும், (நஞ்சு) விஷம் போன்றதும், வாள் போன்றதுமான கண்களைக் கொண்ட பெண்களுடனே, நான் யார் நீ யார் என்னும் வகையில் (மாதர் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) (தங்கள் மன நிலையை) வைத்துள்ள ஞானத்துடன் கூடிய நெஞ்சினராகிய (அல்லது சித்தராம்) யோகிகள் தமது வாழ் நாள், கோள் நாள் (கோளாலும், நாளாலும்) கிரக தேர்ஷத்தாலும் நக்ஷத்திர தோஷத்தாலும், வினாகப் போம்படியான நாளாகாக் காணமாட்டார் (யோகியர் தங்கள்.வாழ்நாளை க்ரஹ சேஷ்டையால் தாக்குண்டு வீணாகப் போக விடமாட்டார்); அது போலவே (நிச்சமாகவும்) உறுதியாக (அல்லது எப்பொழுதும்) (இச்சையானவை) மண், பெண், பொன் என்னும் மூவாசைகள் நேரேதிரா) ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை_ ஆதலால் (ஊரே, பேரே, பிறவே) எனது சொந்த ஊர்போல் இனியவனே! என் பேர் போல இனியவனே! (பிறவே) - எனக்கு இனிய பிற பொருள்களும் ஆனவனே! (நிஷகராதிகள் என்முன் புகாது) Tெடு ' (நிஷகராதிகள்) நிச்சயமாய்ப் பீடிக்கின்றவைகளாகிய மூவாசைகள், மும்மலங்கள், முக் குற்றங்கள், முக் குணங்கள் முதலிய) எவையும் முற்பட்டு என்னைத் தாக்காதபடி, இனிமேல், நீயே தாய்போல் என்மீது அன்பு பாராட்டி அடியன்ே இறந்துபோகா வண்ணம் அருள் புரிவாயாக