பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரூர்) திருப்புகழ் உரை 771 (மிச்ச ரோருக) சரோருகமீ = தாமரைமீது விளங்கினவனே! (அல்லது - சரோருகம் - தாமரை போன்ற கண்களை (மி) மீ - உடலெல்லாம் கொண்டுள்ள) (வச்சிரபாணியன்) குலிசாயுத மேந்திய கையனாகிய இந்திரன், (வேதா) பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே! (நாதாதிதா) நாத ஒலிக்கு மேல்நிலையிலுள்ளவனே! வயலூரனே! கிரெளஞ்சகிரியை உள்ளூடுருவும்படித் தொளைத்துச் சென்ற வேற்படையை உடையவனே! பரிசுத்தனே! பாலனே! (காலாயுதமாளி) காலே ஆயுதமாகக் கொண்டுள்ள கோழியைக் கொடியாக ஆள்பவனே! பச்சை நிறமுள்ளதும், அழகுள்ளதுமான (சூரனாம்) மயில்மீது, (தேவர்கள் முதலானோர்) மெச்சும்படி ஏறின பாகனே! (நடத்துபவனே): அடா! சூரனே! ஆஹா! அப்புறம் போகாதே, (நில்) என்று சொன்ன வீரனே! (பட்டியாள்பவர்) (பிரமனாம்) பட்டிமுநிக்கு அருள் செய்தவர், (கொட்டியாடினர்) கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவர், பாரூர் பூமியில் ஊராகத் திகழும் (பேரூரை), ஆ சூழ் பேரூர் - ஆ (காமதேனு) சூழ் (வலஞ் செய்து 鷺 பேரூரை, ஆள்வார் - ஆண்டருள்பவராகிய வபெருமானுக்குப் பெருமாளே! (நாயேன் மாயா தருள்வாயே) (தொடர்ச்சி): "படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி யாடுங்கால்" கலித்தொகை - கடவுள் வாழ்த்து. O ஆ சூழ் - காமதேனு பூசித்த தலம் பேரூர். பிரமதேவர் படைப்புத் தொழில் செய்ய எண்ணிச் சிவலோகத்தில் இருந்த பொழுது திய ஊழினால் நித்திரை செய்தனர்; அப்போது திருமால் காமதேனுவை நோக்கி நீ தவம்புரிந்து சிவனார் அருள் பெற்றுச் சிருட்டித் தொழில் செய்வாயாக’ என்றனர். அங்ங்ணமே, காமதேனு பேரூரில் தவஞ்செய்து கொண்டிருந்தபோது அதனுடைய இளங்கன்று அங்கிருந்த புற்றினை மிதித்தது. அதன் அடி புற்றினுள் இருந்த ஆதிலிங்க மூர்த்தியின் திருமுடியிலே அழுந்திப் பெயர்க்கக் கூடாமையால், கொம்புகளாற் குத்தி அது அப் புற்றை உடைத்தது. கொம்புகளும், கால் குளம்பும் பட்டதனால் இலிங்கம் திருமுடியில் குளம்புச் சுவடு, கொம்புச் சுவடு (தொடர்ச்சி 772 ஆம் பக்கம் பார்க்க)