பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1406

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புத்தூர்| திருப்புகழ் உரை 847 (ஆலகோடு) விஷத்தின் வரம்பு - அடையாளத்தைக் காட்டும் கழுத்தை உடைய ஜோதிப் பெருமான் - (பிரம) கபாலத்தைக் கையில் ஏந்தினவன், பார்வதி அன்பு வைத்து மகிழ (அல்லது பார்வதி பக்கத்திலிருக்க) நடனமாடுபவன, (தாத்திரி) பூமியைப் (பட்சித்து) உண்டு, ஆவென்று வாய்திறந்து உமிழ்ந்து விளையாடின (திருமாலை) (வாளி) அம்பாகத் (திரிபுர சம்மார) (ஆடல்) போரில், (கோத்த) அமைத்துக் கொண்ட (சிலை) மேருவாகிய மலை வில்லைக் கையில் ஏந்திய பராக்ரமசாலி, (ஒடை பூத்த தளக்கள்) நீர்நிலைகளில் பூத்த பூ இதழ்களின் மது கலந்த (சானவி) கங்கையாறு நிறைந்து தோன்றும் திரண்ட முடியாம் சடையைத் தரித்துள்ளவன், (சிலம்) பரிசுத்தத்தை உடைய (மா) சிறந்த (பதி) கடவுள், (மத்தம்) களிப்பு நிறைந்த (பாரிட சேனை) பூதப்படைகள் போற்றிநிற்கும் அப்பர், ஆகிய சிவனுக்கு (ஒதிய சேதன அர்த்த ப்ரசித்திக்கே வரு) (சேதன அர்த்தம்) ஞானப்பொருளை உபதேசித்த (ப்ரசித்திக்கே வரு) கீர்த்தியே மிகக் கொண்டுள்ள முருகனே! சேல்மீன்களும், நீங்காத கயல்மீன்களும், (தத்த) குதிக்கச் ழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருப்பவனே! வேல்கொண்ட ருக்கரத்தனே! (விப்பிரர்க்கு) அந்தணர்க்கு (ஆதர) பற்றுக் கோடாய் உள்ளவனே! திரனே! (தீர்த்த) பரிசுத்த மூர்த்தியே! (அல்லது, சிவகங்கை, சீதளி என்னும் தீர்த்த ச்ேடங்களை உடைய) திருப்புத்துார் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தீவினை ஒழியேனோノ (தொடர்ச்சி) if சிவபிரானுக்கு உபதேசித்தது பாடல் 327-பக்கம் 314 கீழ்க்குறிப்பு. # விப்ரர்க் காதர. அந்தணர் வெ றுக்கை' - தி மு.முருகாற்: வேதியர் வெறுக்கையும் அனாதி பரவஸ்துவும் வேளைக்காரன் வகுப்பு: விப்ரகுல யாகச் சபாபதி வேடிச்சி காவலன் குப்பு. XX திருப்புத்துார்ச் சிவனையும்"திர்த்தன்"என்றார் அப்பர் பெருமான் : தீர்த்தன் காண்...திருப்புத்துாரில் திருத்தளியான் காண் அப்பர் 6-76-1. அத்தடம் கமலையாற் சீதளிப் பெயர்த்தாம்' திருப்புத்துார்ப் புராணம்.