பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருளை திருப்புகழ் உரை 183 இடமும் மடு (ஆற்றிடைப்பள்ளம்) அன்று. படுகுழியாம் (யானைகளைப் பிடிக்க அமைத்த) பெருங்குழியாம் என்றும்; இடையானது துடி (உடுக்கை) அன்று, மன்மத்னது உருவம்ாம் என்றும் (அதாவது அருவமாம் (உருவம் இல்லாதது) என்றும் அழகிய கொங்கை மலையன்று, கொலைசெய்யும் யமனே என்றும்; கொங்கையின் மேல் புரளுகின்ற கோத்த வடம் (மாலை). முத்துமாலை - ரத்னமாலை அன்று, யமன்விட்ட பாசக்கயிறே ஆம் என்றும் மாதர்கள் மாதர்கள் அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காணவல்ல ஞான உணர்ச்சியுடன் கூடும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா! வன தேவதைகள் தன்னுடைய இரண்டு, சிலம்பணிந்த அடைக்கலம் புகத் தக்க, மலரடிகளை மலர்கொண்டு வழிபட மலைமேல் விளைந்துள்ள (தினைப்) புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான்போன்ற வள்ளியும். தேவர் வளர்த்த மகளாம் தேவசேனையும் இரண்டு பக்கத்திலும் வர, (முகரம்) ஒலி செய்வதும், (முகபடம்) முகத்தில் தொங்கும் அலங்காரத் துணிகொண்டதும், உணவு கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலையன்ன பிணிமுகம் என்னும் யானையின்மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே! சேர்க்கையின்பத்தில் விளையாடுகின்ற (182ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) அருள் செய்வதற்கும் போர் புரிவதற்கும் எழுந்தருளும்போது முருகவேள் பிணிமுகம்' என்னும் யானைமேற் செல்வார். வேழம் மேல்கொண்டு" "அங்குசம் கடாவ ஒரு கை" ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" திருமுருகாற்றுப் படையும், அதன் உரையும் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி" - பரிபாடல் 5.2 "கடுஞ்சின விறல்வேள் களிறுார்ந் தாங்கு" - பதிற்றுப்பத்து 11. - புறநானூறு 56.