உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 205 526. அமுதமே ஊறிவருவதுபோல இனிக்கும் சொற்களைக் கொண்ட மயிலனைய மாதர்கள், பொருள் உள்ள செல்வர்களை என்மேல் ஆணை உம்மேல் ஆணை” , (நீர் என்னை விட்டுப்போகக் கூடாது) (என் வீடு அருகு இதுதான்) என்விடு சமீபத்தில் உள்ளதே இதுதான்; அங்கே வாரும் . என்று (உரைகூறும்) பேசுகின்ற அசட்டு (மூடப்பெண்கள்}, குதர்க்கம் பேசும் கேடுறு. வோர், தெருவில் குலவி உலவுபவர்கள், அத்தகையோர து மாயை என்மீது தாக்காமலும், நான் கெடாமலும் இருக்க உனது திருவருளைத் தந்தருளுக. குமரி, காளி, வராகி, மகேசுரி, கெளரி, மோடி, சுராரி நிராபரி - (சுரர்களுக்குத் தேவர்களுக்குப் பகைவர்களான) அசுரர்களை முதன்மை இழக்கச் செய்பவள் # கீழ்ப்படுத்தினவள் - அல்லது (சுராரி) தேவர்களுக்குக் கண் போன்றவள் (அல்ல து தேவர்களின் பலமாப் நிற்பவள்), (நிராபரி) - பொய்யிலி - உக்ரமான சூலத்தை ஏந்தியவள், (சுடாரணி) ஒளிமயத்தவள், (யாமளி) சியாமள நிறம் (அல்லது) ஒருவகைப் பச்சை நிறத்தை உடையவள்-மகமாயி - குறள்ருபம் (வாமன ரூபம் - குட்டை உருவம்) கொண்ட (முராரி) திருமாலின் சகோதரி, உலகத்தைத் தரித்துப் புரப்பவள், உதார குணம் (தயாளகுணம்) உடையவள் (கொடையாளி), முதன்மை பூண்டவள், குருபரனாம் சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூணவல்லவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள் } - போர்வல்ல துர்க்கை, திரிபுரத்தை எரித்தவருடைய பத்தினி (தலைவி), (மலை) இமயமலையின் புதல்வி, கபாலம் ஏந்தினவள், நல்ல நாரணி, நீர்பொழியும் மழைபோன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பராசக்தி, யோகி.