உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 213 (கடையுங்) கயிறாக, தேவர்கள் பலகோடியும் (கூடி) முறை முறையாக (வரிசை வரிசையாக) அமுதம் கடைந்த அந்த நாளில் (பிழைக்கும்வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய மேகத்தின் வரிசைபோலச் (எழுந்து) செயலாற்றும் மதயானைகளும் (அவர்ட கஜங்களும்), எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும், சூடே காந்திப் போய்க் கரிநிறங்கொள்ள, அண்ட உருண்டை வெடிபட யாரையும் மேலிட்டு அடக்கி, வேல் போலப் பரந்துவரும் விஷம்போலத் தொங்கும் குழை வரையிலும் நீண்டு, காமங் கொண்டவர்களுடைய உயிரை உண்ணக் கவர்வதும், பஞ்ச பாதகங்களுக்கும் இடந் தருவதுமான தன் என்னும் வலையைக்கொண்ட மாதர்கள்மீது காதல் மிகுவது - (மிகும் குணம்) என்னைவிட்டு விலகாதா! போர்க்களத்தே இடம் பெற்று வளைவாக அணைந்த பேராரவாரம் செயும் (அல்லது உக்ரம் கொண்ட) அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாகவும், மேகம்போல உருவம் (கறுத்த) தாரகாசுரன் அஞ்சும்படி, மீன்கள் உள்ளதும், இருண்டதும், அலைவீசுவதுமான கடல் கலங்கி முறையிட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச்சேரப், பழைய (கிரவுஞ்ச) கிரியில் (வேல்) ஊடுருவிச் செல்லக் கோபித்த பராக்கிரமசாலியே! செம்பொன் மேருமலைக்கு ஒப்பான பருமைகொண்ட வலிய கோபுரங்களை உடைய திருவன்ணாமலையில் வீற்றிருக்கும் (அருந்து உண்ணாத) பிடித்துப் பருகுதல் இல்லாததான கொங்கையை உடைய என்றும் புதியவளாம் மாது (பார்வதி) ஈன்ற குமரனே! அடர்ந்து பொருந்திய ஆசை கொண்டு காட்டில் தனது உண்மை உருவை மறைத்துச் சென்று ஒரு குறப்பெண் (வள்ளியின்) பின்பே திரிந்த காமுகனே (காமப் பித்தனே): திருமால், பிரமன், இந்திரனாதிய தேவர்களுக்குத் தம்பிரானே! (மகளிரொ டன்பு கூர்வ தொழிந்திடாதோ)