உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை) திருப்புகழ் உரை 215 530. சூரியனும் சந்திரனும் தெரியும்படி தோன்றிவரும் (இப்) பூமியில் சுற்றமாகப் பொருந்திவரும் (மாதும்) மனைவியும் - அழகிய மக்களும் நின்று அழுது உள்ளம் உருகும் படியான வருத்தத்துடன் துன்பமொழிகள் பல சொல்ல - கறுத்த உருவத்துடனும் நெருப்பு வீசும் கண்ணுடனும் (என்) உயிரைக் காலனும் பிடிக்கக் கருதி வருவதற்கு முன்பாக படித்த நூற்படிப்புடன் பல துன்பங்களும் நீங்க உனது திருவடியிணைகளை (நான்) தியானிக்கும்படி கண்பார்த். தருளுக. லகூழ்மி பொருந்திய திண்ணிய (வலிய) புயத்தவனாம் (திருமால்), பிரமன், பரந்த எண் திசையிலுள்ளோர் (யாவரும்) (கிடுகிட) நடுநடுங்க வந்த சூரனுடைய வலிமை வாய்ந்த புயங்கள் அறுபட்டு விழ, அலைவீசும் கடல் அஞ்ச (பயப்பட), வலிமையுடன் கோபித்த வேலனே! (அருமறையவர்) அரிய வேதங்கள் வல்லவர்களும், (அந்தரம் உறைபவர்) வானில் உறையும் தேவர்களும் அன்புடைய அடியார்களும், (உய) பிழைக்கும் வண்ணம் அன்று (முப்பத்திரண்டு) அறங்களை விரும்பிச் செய்த (தேவி) பார்வதியை, ஒரு பாகத்தில், இடப்பக்கத்தில். கொண்டவரான சிவபிரான் (தங்கு) வீற்றிருக்கும் திரு வண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (நின் கழலிணை கருதும் படிபாராய்) 531. சாமர்த்தியத்துடனே சூழ்ந்து துன்பத்தைத் தரக்கூடிய கொடிய பாசக்கயிற்றைக் கொண்டு, கண்கள் திய நெருப்புப் போல (வெறி கொடு) கோபத்துடனே யமன் ஆய்ந்து உயிரைக் கொள்ளவேண்டிய முறைநாள் இன்று எனத் தேர்ந்து, விதியின் ஏற்பாட்டின்படி வந்திடும் அந்த சமயத்தில் களவு - வஞ்சகம் மிகுந்த மனத்துடனே மாதர்கள், சுற்றத்தார்கள் கண்களில் நீர் பாய்கின்ற