பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 261 கால் (தென்றல்காற்றை) ஆளும் (தேராகக்கொண்ட) மன்மதனும், ஆலாலம் (கடலிற் பிறந்த விஷத்தை) உண்ட நாதர் சிவபிரானுடைய காலால் தேய்க்கப்பட்ட நிலாவும் முனிய (கோபிக்க). இந்தப் பூமியின்மேல் நாணம் கொண்ட மயிலன்ன இப் பெண், தனது நூற்புடைவை நெகிழ நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க (உள்ளம்) அழிந்து, அதனால் பலவித அபவாதம் (அபகீர்த்தி - அவதுாறு) மேலெழுந்து வெளிப்பட, உடல் நாள்தோறும் வாடி மயக்கம் உறலாமோ, சோணாசலம் (என்கின்ற) திருவண்ணாமலை ஈசனே! (பூண் - ஆரம்) அணிந்துள்ள முத்துமாலை (அல்லது கடப்பமாலை) பெரிய தோள்கள் பன்னிரண்டிலும் விளங்குகின்ற நாதனே! தோல்வி யிலாத வீரனே! வேல்கொண்டு, அடுதல் இலாத (அழிதல் இலாத) (அல்லது, தகாத செய்கைகளைச் செய்த) சூரன் என்னும் ஆண்மையாளன் இறந்து போம்படி கோபித்த தலைவனே! விண்ணுலகத்தினருடைய உலகில் வாழ்ந்திருந்த மாது தேவசேனையின் நீங்காத அன்பு - முடிவிலாத அன்பு விளங்கும் மார்பை உடையவனே!

தேவர்கள் ஆதியோர், மூன்றெனக்கூடிய ஆதிமூர்த்தி. களாம் மூவர் (பிரமா, விஷ்ணு, ருத்திரன்), தேவர்கள் ஆதியோர்க்குத் தேவர்களாயிருக்கின்ற தேவேந்திரர்கள் - இவர்கள் யாவர்க்கும் பிரானே (தம்பிரானே): (நாடோறும் வாடி மயங்கலாமோ)