பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை Զ(ՅՅ 554. மேகம்போல விளங்க அந்தக் கூந்தல், (ஆல் ஆலக்கணை) பெரு விஷம் தோய்ந்த அம்புபோன்ற கண்கள் சுழல . முகங்களில் நாலாவிதமான பச்சிலைகளை மேலே பூசி மஞ்சளையும் கலந்து அணிந்துள்ள வாளி காதணி) யானது (கொந்தளம்) கூந்தலுக்கு அருகில் உள்ள காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, (இன்பரசம் குடி குடமார்) இன்பரசம் குடிகொண்டிருக்கின்ற குடங்கள் போன்று பளிங்கின் ஒளிகொண்ட கொங்கைகளை உடைய மாதர்கள் - காசின் மேற்கொண்ட ஆசைச் செயல்களால் மயக்கப் பொடி போடுகின்ற மாயவித்தை வல்லவர், கொஞ்சிப் பேசுபவர், இளங்குயில் போலே நல்ல தெருக்களில் ஊடாடி (அங்குமிங்கும் செல்பவராய்) அசைகின்ற மேலாடை நெகிழவும், இடை துவளவும், கால்கள் தாவ, தாள ஒத்துடனே சித்திரப்பதுமை என்னும்படி நடனம் புரிபவர் - இத்தகைய (பொதுமாதர்களுடன்) இணக்கச் செயல் அதிகமாகி . சீராகக் காலங்கழித்துச் சில நாள் சென்றபின் உடலில் திரைகள் (தோல் சுருக்கங்கள்) வந்துஏற்பட, உயிர் போகும்படி (இந்த) (அங்கமோடு) உடலோடு (ஊடாடி) வேதனைப்பட்டு பல நோய்களுடன், தடியைப் பிடித்துக் கொண்டு குரங்குபோல நடந்து, சொல்கின்ற "சி" என்னும்சொல் (ஒடி) எங்கும்பரவக் கிடக்கை படுக்கையாகி, (உக்கி - அடங்கி - அழிந்து) - மெலிவுற்று, ஒடுங்கி, அழிதலுற்று, உயிருடனே (உளைஞ்சு) வேதனை உற்று ஒளியும் கண்ணினின்றும் விலகி குருடாய்). (பொறி சேராமல்) அறிவு ஒருவழிப்படாமல் அழிந்து (செவி கேளாமல்) காதுங் கேளாமல், துன்பம் - இன்பம் இரண்டையும் மறந்து - பிரக்ஞை யற்றுப்போய், ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மற்று மக்களும் நெருங்கியும் பக்கத்திற் கும்பு கூடியும் இது சீசி சிச்சி சி (இப்போது) போகாது, நல்ல சனியன், கடக்கட்டும் அப்படியே கழிந்து போகட்டும் என்று கூறிச் செல்ல, அங்ங்னமே கிடந்து உடல் அழிவேனோ!