பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ 'குடவியிடு மரிவையர்க் ளாசைப் பாட்டிலெ கொடியேன்யான்; பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய புலையணிவ னெனவுலக மேசப் போக்கென பொறிவழியி லறிவழிய பூதச்சேட்டைகள் பெருகாதே. புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவெனப் புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட நினையாதோ: அரவமுட னறுகுமதி யார் t மத் தாக்கமு மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய அறிவோனே. அழகுசெறி குழலியர்கள் + வானத் தாட்டியர் தருமமுது சரவணையில் வாவித் தேக்கியெ xஅறுசிறுவ ரொருவுடல மாகித் *ஜி: Go «Op6TrGʻLL/ITQ56UT; 'குடவியிடும் - வளைக்கும் மத்த அக்கமும் ஊமத்தையும் உருத்திராக்ஷமும் 4 வானத்தாட்டியர் - கார்த்திகை மாதர்கள். Xகார்த்திகை மாதர்கள் அறுவரையும் மகிழ்விக்க ஆறு குழந்தைகளானார் முருகவேள், பின்னர், தேவி அறுவரையும் ஒன்று சேர்த்து அணைக்க ஒரு உடலம் கொண்டார். "உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவ ரொரு வர்க்கவணொ ரோர்புத்ர னானவனும்" - வேடிச்சி காவலன் வகுப்பு "மறுவறு மார லாகு மாதர்மூ விருவர் தாமும் நிறைதரு சரவணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்குவேண்டிற் றுதவுவோ னாதலாலே அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்". கந்தபுரா - திரு அவதாரம் 116 "எடுத்தனள் புல்லித் திருமுகங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்". கந்தபுரா-சரவண 20 "அன்னவன்கன் டவ்வுருவம் ஆறினையும் தன்னிரண்டு கையாலெடுத்தனைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்து". கந்தர் கலிவெண்பா.