உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 269 மேருமலையும் (கிரெளஞ்சமும்), பெரிய சூரனும், ஏழுகிரியும், கருநிறத்து அல்ைஇேலையும் (அலைகடலும்), பன்கவர்களும் அஞ்சும்படி செலுத்தின வ்ேலனே! உலகம் வணங்கும் திரு அண்ணாமலையில் விளங்குகின்ற திருவீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. (கடம்பமலர் தந்தருளுவாயே) 556. ராக விநோதங்கள் அமைந்துள்ளமை பற்றி மெச்சக் கூடிய குரலின் இனிமை கண்டும், வகிர்ந்து வாரப்பட்டதும், கருநிறம் நிறைந்ததும், முடிபோடப் பட்டதுமான கூந்தலைக் கண்டும். (மயங்கி) நீதி என்பதே இல்லாத வகையில் அழிதகவான செயல்களைச் செய்து நான் திரியாதிருக்க நீ மயில்மீதேறி (மனம்) பொருந்தி வர வேண்டுகின்றேன்! * சூதான எண்ணங்கள் கொண்ட சூரர்கள் அஞ்சும்படிப் போர்செய்த சூரனே! சோணகிரி (திரு அண்ணாமலையில்) வீற்றிருக்கும் குமரேசனே! ஆதியர் (சிவபெருமானது) காதில் ஒப்பற்ற சொல் (பிரணவத்தை) உபதேசித்தவனே! ஆனைமுகத்தவராம் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியாகும்) பெருமாளே! (நீ மயிலேறியுற்று வரவேணும்) 557. ராமலரின் நறுமணம் பொருந்திய (அளகம்) மயிர்க் குழற்சி கொண்ட கூந்தலை (அல்லது அளகம் எனப்பேர் பெற்ற கிந்தலைக்) (கோதி) சிக்கெடுத்துக் காட்டியும், விளங்குகின்ற இரண்டு கயல்மீன்கள் போன்ற கண்கள் '. மோதித் தாக்கியும், குமுதமலர் போன்றதும், பொருந்திய பவளம் போன்றதுமான வாயைக் காட்டியும், இளகாத (சூதம் அமர் சூரர் எனக்கொண்டு மாமரமாய் நின்ற சூரபதுமர் எனலுமாம்)