உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 277 பெருங்கருணையால் உதவின இளங்குமரனே! செழிப்புள்ள நீலநிறம் உள்ள திருமாலுக்கு மருகோனே! ஜோதி நெருப்பாகத் தோன்றின (சோணகிரி) அருணகிரி என்கின்ற சிறந்த மலைக்குள் அழகுள்ள வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே! விடாது பெய்யும் பெருமழைபோல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்துபோம்படி ஜயம் பொருந்திய தோள்மீது (கையில்) வாளாயுதத்தை எடுத்த பெருமாளே! (iறுமயில் மீதிலுற்று வருவாயே) 560. மடவார்களின் (பெண்களின்) கோடான (மலைபோன்ற) கொங்கையிலும் - கூரிய வேலுக்குச் சமானமான கண்களிலும் ஊடாடினவனாய் - (கலந்து பழகினவனாய்) அவர் களோடு திரியாமல் (எனது சொந்த ஊர்போல) (நிலைத்த) இருப்பிடமாக விளங்குகின்ற (உனது) திருவடிகளை அருள்வாயே விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஒடி மயில்மேல் வந்தவனே! நெருப்பான ஒரு ஜோதிமலையில் (அண்ணாமலையில்) வீற்றிருக்கும் (பெருமாளே!) சோழநாட்டார் புகழும் (பெருமாளே!) தேவர் பெருமாளே! (பாதம் அருள்வாயே)