உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 287 பொன்னுலகின் நீழலில் இருந்து (உன்பால்) அன்பு பூண்டுள்ள தொண்டர் பக்கத்திற் சேர்ந்து பொருந்த இனி உனது அருட்கிருபையை வந்து தர, என்றும் உனது கடமையாகும்; என்னுடைய உடலும் உயிரும் உன் பாரமாகும் (உன் ஆட்சிக்கு உட்பட்டதாகும்); அடியேனுடைய தொண்டை ஏன்றுகொண்டு அன்பர்களுடனே. சேர்க்கை இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று, உனது திருவடியில் புணர் கரணம் (கரணம் புணர) - என் மனம் பொருந்த, மயிலின் புறத்தே மகிழ்ச்சிபூண்டு, தேவர்களும் பொன் மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பானது மகிழ்ச்சிகூடி இன்றே என்னை முன்னதாகக் கருதாதோ! (முதலில் நினைக்காதோ)! தனனதன தனனதன....டங்குடங் குந் என (தடம்) ஒலிக்கும் வளைவுள்ள (தவில்) மேளம், முரசு, பறை, திமிலை (ஒருவகைப் பறை) இவையெலாம் டிங் டிங்குந் தென்று ஒருங்குகூடி பேரொலி எழுப்பத், தேவர்களின் பேரி வாத்தியம். தடு டுடுடு டுடுடுடுடு.டிமிடிமிட டகுர்திகுகு என ஒலிக்க, சங்கும், (வெண் கொம்பும்) வெண்ணிறமுடைய ஊதுகொம்பும், வலிய (கடையுகம்) யுகக்கடை - யுகாந்தம் - யுகமுடிவு போல ஒலிசெய்ய, கடல் அஞ்ச, வஞ்சனாகிய சூரனது குலம் சிதறுண்டு அழிய, கோபம் மிக உண்டாக, வேலாயுதத்தைச் செலுத்தித் தேவர்கள், அந்த (அம்பரம்) கடல், திசைகள், (இவைகளில் உள்ளோர்), (உரகர்) நாகர், பூமியில் உள்ள (மந்தரம்) மந்தரமாகிய மலைகளில் உள்ளோர். பிரமன் உலகங்கள் முழுதும் (இங்ங்னம் யாவும்) மகிழ்ச்சிகொள்ள, திருமாலும் பிரமனும் அடிமைபூண்டு அபயந் தா என்று ஒலிடும் LITTL-ol) 553 MITITILI LITTL அழகிய புன்னகையைப் பூத்தருளி, எனது தந்தை சிவபிரானது பக்கத்தில் உள்ள கவுரி (உமையவள்) மனம் குழைய, ஒப்பற்ற கங்கை (உன் ஆடலைப் பார்த்து) அன்பு கொள்ளும் தம்பிரானே! திரு அண்ணாமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே! சங்கரன் கும்பிடும் தம்பிரானே! (அன்புகந்து இன்று முன் சிந்தியாதோ)