பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 291 செம்மையான திருக்கரத்தில் (மேரு மலையாம் (வில்லை எந்தி)த் திரிபுரங்களில் நெருப்பு பற்றும்படிச் செய்த சத்தி (தேவி), சிவன் உடனிருந்து விரும்ப, (அல்லது முப்புரத்தில் எரியிட்ட வன்மைவாய்ந்த சிவன் உடனிருந்து விரும்ப), மிகுந்த சித்துக்கள் யாவற்றையும்’அட்ட சித்திகள் முதலான சித்துக்களை யெல்லாம் கண்ட சத்தி (சித்துக்களுக்குப் பிறப்பிடமான சத்தி) - (உமை) பார்வதி பெற்ற குழந்தையே! வாதிட்டு வந்த அசுரர்களைச் செயித்து, மலைகள் பொடியாக, ஏழு கடல்களையும் எளியிட்டு, எட்டுத் திசைகளும் (தட்ட) நுறுங்க, (முட்டை அடைய) தவிடுபட, (கொடிப்புகை) நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்ரத்துடன் நெருங்கும் வேலாயுதனே! கிளி போன்றவள், பவளநிற முடையவள், முத்துமாலை அணிந்த குறப்பெண் (வள்ளி), கற்பக வனத்தி (கற்பக மரக்காடு உள்ள பொன்னுலகத்தவள் (தேவசேனை) - ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்பத் திரு அண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே) (பிறப்பிலுற்றுடலம் மங்குவேனோ) 566. செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள (செஞ்சொற்களாற் புகழத்தக்க) குடம்போன்ற பருத்த கொங்கையானது கும்பகலசம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறங்கொண்ட பற்களின் வரிசை முத்துப்போல விளங்கியும் துன்பத்தில் என் ஆவியைத் தள்ளி மணம் வீசவல்ல அ வாய்ந்தனவாம்; (ஆதலால்) உனது அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை யர்ன் உவமையாகக் கூறுவது; (திண்) வலிமையுள்ள பவளமும் தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிறத்திலும் சுவையிலும் நிகராகுமோ!

  • அட்டசித்தி - திருப்புகழ் 296 - பக்கம் 236.