உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய பெருமாளே (58) 566 - 1 சிவ அமுது உண்ண தனதன தனனாத் தனதன தனணத் தனதன தனனாத் தனதன தனணத் தனதன தணனாத் தனதன தனணத் தனதான *செய செய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா. செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி, செய செய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செய செய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச். சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக யகட லமுதைக் குடியேனோ, "இந்த அருமைப் பதிகம் பாராயணத்துக்கு மிகப் பொருத்தமாம். ஏனெனில் பஞ்சாக்ஷரமும் நினைத்தால் முத்தி அளிக்கும் அருணாத்திரி. என்னும் திருநாமமும் பல முறை வருவதால் உன்னினர் தங்கட்கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கும்" மலை அண்ணாமலை, சிவயநம என்னும் பஞ்சாக்ஷர மாறுதல்களும் கவனிக்கற்பாலன. இங்கனம் மாறி உரைப்பதன் பலனை 'நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதற்கொண் டொருக்கால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே . சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஒகார முடனே ஒருகாலுரைக்க -என வரும் திருமந்திரப் பாக்களிற் (976, 982) காணலாம். (தொடர்ச்சி பக்கம் 295-பார்க்க.)