உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 567. காலன் வருநாளில் தரிசனம் பெற தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த தனதனத தனதான தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு மெழுகிய அங்கமும் பார்வ்ை யிற்கொ ளுந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு முளக்தக் “கடமாமேல். தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள்; கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு நகையு நெடுங்கனுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற் சுடர் வேலுங். கடிதுல கெங்கனுந் தாடி யிட்டு வந்த மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக் கருள்கூர்வாய், இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை யிளமுலை யின்செழும் பால்கு. டித்தி லங்கு மியல் நிமிர்த் திடுவோனே.

  • கடமா - மதயானை - கடமா முகத்தினாற்குத் தாதை கான்

- அப்பர் - VI - 65.9, 1 தாடி - தாவடி பிரயாணம்,