பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை) திருப்புகழ் உரை 297 'ஜெய ஜெய திருவடி மலையே (சிவமலையே)" என்று கூறும் இது (வினை காத்திடும் என முநிவர் கணம் மருவ) வினைகளைப் போக்கிடும் வினையினின்றும் காத்திடும் நம்மை என்று முநிவர் கூட்டங்கள் கூடிப் பொருந்தத் தங்களுடைய உடலையும் முடியையும் கிரெளஞ்சம், எழுகிரி என்னும் மலைகள் காப்பாற்ற நின்ற அசுரர்கள் மடிந்து விழச் சுட்டெரித்த வேலாயுதனே! திருமுடியையும், திருவடியையும் கண்டுபிடியுங்கள் எனக்கூறித் திருமால், பிரமா என்னும் இருவர்க்கும் அடியும் முடியும் தெரியாத வண்ணம் நின்ற செந்நிறச் சிவசுடராம் - அக்கினிக் கண்ணனாம் சிவனுடைய இரண்டு செவிகளும் குளிர) உபதேசம் செய்தவனே! ஜெய ஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு "(உனது) இருவினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் (யாம் செய்யும்) திருநடம் இதோ! பார்ப்பாயாக’ எனக்கூறி மகிழும் அழகிய குருநாதனே! விளங்கும் (மொழி) கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும் அமைந்து, வாயிதழ் (ஊறல்) அமுதம் போல அடைந்துள்ள குறமகள் (வள்ளியின்) கொங்கையின் மீது உள்ள புது மணத்தை அனுபவித்துச் சிவமலையாம் அருணாசல தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே! (சிவவாக்கிய கடலமுதைக் குடியேனோ) (296ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) O அடியேனுக்கு. †

  • சுவாமிகள் நடன தரிசனம் பெற்றதைக் குறிக்கும்.

fi அருணாத்ரி - அருணாசலம், அத்திரி - மலை இப் பாடலை அருணகிரிநாதர் வரலாறு என்னும் எனது நூலிற் (பக்கம் 249) பார்க்க