பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 309 571. (தேது என) (தேசு என) ஒளி உடையதாய் (அல்லது அழகு உடையதாய்), (வாசம் உற்ற) - நறுமணம் கொண்டதாய், (இசை விநோதம்) - விநோதமான இசைகளை விரும்பித் தேனுண்னும் வண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதான மலர்களாலும். கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய (விஷம் போன்ற) விஷத்தைக் கக்குகின்றதான அதில வீசுகின்ற நெருப்பினாலும். - போதனை (போதில் - பூவில் வீற்றிருப்பவனும்) நீதியில்லாதவனுமான வேதனை (பிரமன் மேலே) (வாளிதொட்ட) (தனது) (மலர்) அம்புகளை ஏவின போரில் வல்ல மன்மதராஜனாலும் - நான் அழிவுறாமல். பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன்மீது) மோக தாகம் (காம ஆசை) மிக்குள்ள (இந்த)ப் பெண்ணை நீ அணைக்க வரவேணும். கங்கை என்னும் பெண்ணைச் சடையில் வைத்துள்ள தலைவனாம் சிவபிரானும், போற்றப்படுகின்ற பச்சை நிறத் திருமாலும் விரும்புகின்ற மயில் வீரனே! தேவர்களின் சேனை எல்லாம் வாழ்கின்ற அமராபதியில் (இந்திரன்நகரில்) இருந்த யானையால் (ஐராவதத்தால்) வளர்க்கப்பட்ட கிளிபோன்ற தேவசேனைக்கு மணவாளனே (கணவனே)! உலகோர் செழிப்புறவே திரு அண்ணாமலையின் வீதியில் வீற்றிருக்கும் முருகனே! + சகோதர முறையுள்ள பிரமன் மீதிலேயே பானம் எய்த மன்மதனுக்கு நான் எந்த மூலை - என்னும் பொருள் இந்தி அடியில் தொனிக்கின்றது.