பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 361 பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து, ஒப்பிலாத (இறைவனுடைய) திருவிளையாடலும், செவ்விய அழகிய பரமகதியும் இதுவே ஆகும் என்று உணர்ந்து நான் அழகிய நிலையைப் பெறவும் பவளம் (அன்ன) போன்ற திருவுருவத்துடன் - நீ உன் அழகிய திருவடியை (அடைந்த) (அடியவரார்) அடியார்கள் (மன) மன்ன - பொருந்தி உடன்வர அழகிய, பொலிவுள்ள, இளமை வாய்ந்த அடைக்கலம் தர வல்ல (அல்லது பாதங்களை உடைய) மயில்மீது ஏறி உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்தருளுக. தகுட தகுதகு. டாடக டிங்குட் என்று ஒலிக்கும் தாளமும், (தபலை). (தபளா) மத்தளவகை, (திமிலைகள்) பறைவகை, (பூரிகை) ஊதுகுழல், (பம்பை) (பறைவகை), (கரடி) கரடி கத்துவதுபோல ஒலி செயும் பறைவகை, (தமருகம்) உடுக்கை, வீணைகள் இவையெலாம் பேரொலி எழுப்பத், (தடி) தடியப்பட்ட - கொல்லப்பட்ட (அழனம்) பிணங்கள், (உக) சிதறிவிழ, வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து

  1. =

ஆகாயம் மறைவுபட (வந்து பந்தரிட்டது போலக் களிப்புடன்) கூத்தாடும் செவ்விய (கருடன் முதலான) பறவைகளின் பசிகள் அடங்கவும், சூரர்கள் அழிவுறவும், கடல்கள் அலையுண்ணவும், ஆதிசேடனும் (அல்லது அஷ்ட நாகங்களும்) அஞ்சவும் செலுத்தின வேலாயுதனே! கயிலாய மலையில் திருவிளையாடல் செய்யும் தந்தைக்கு. சிவபிரானுக்கு - (உருக மனம்) மனம் உருக, முன்பு, விருப்பத்துடன் அவருடன் கொஞ்சி விளையாடிக் கனகசபையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (பொற்கழல் தாராய்)