பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் திருப்புகழ் உரை 31 பிரிவுகள் கொண்ட பகிர்தல் செய்யப்பட்ட உருட்டும் (புரளும் குரலிசையும்), (அல்லது இசை நரம்புகளை வருடுதலும்), கமுகமும் (கமகமும்) ஸ்வரபேதமும், சிற்பத்தின் (சிற்ப நூலிற் சொல்லப்பட்ட) சித்திரம் (அழகையும்) உருக்கும் மெலியச் செய்ய வல்ல (அழகும்), பிரதி அண்டத்தை (ஒவ்வொரு அண்டத்தையும்) பெற் றருளியதுமான சிறு வயிறும், இருண்ட கறுத்த மேகத்துக்கு நிகரான கூந்தலும், நெற்றிப் பொட்டும், செம்பொன் பட்டமும், முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும், தெய்வத்தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சைநிற அழகும், தியானிக்கும் அன்பர்க்கு வீடுபேறு அளிக்கும் தன்மையும் கொண்ட கவுரி தேவிக்குப் புத்திரனே, எல்லார்க்கும் பெருமாளே! (தொண்டடைவேனோ) 460. பழத்தைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்புமலை (சர்ப்பகிரியாம்) திருச்செங்கோட்டையும், பழநியையும், தெற்கில் உள்ள சற்குருமலையாம் சுவாமிமலையும், கதிர்காமத் தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்துாரையும், வேலாயுதத்தையும் கனவிலும் சொல்லி அறியாத என்னைச் சங்கடம் தரும் (இந்த) உடம்புக்கு (உடம்பின் சுகத்துக்கு) வேண்டிய சகல பொருள்களையும் கவர்ந்து - (திருட்டு) வழியிலாவது அடைந்து) கற்பனையிலே (கபட யோசனைகளிலேயே கருத்துக்களிலேயே) நோக்கம் கொண்டு சுழலும் என்னை