பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 383 சிரித்து அழகிய திரிபுரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரிசெய்த (கபாலியர்) சிவபிரானுடைய பக்கத்தில் இருக்கின்ற விளக்கமுள்ள பொலிவு நிறைந்த (சுந்தரியாள் சிவகாமி) சிவகாமி சுந்தரியாள் பெற்ற குழந்தையே! உனது அழகிய உள்ளத்திலே குறமாது) வள்ளியை இருத்திக் கண்ணால் மகிழ்ச்சி மிக்கடைந்து பொன் வேய்ந்த திருச்சிற்றம்பலத்தே (பொன்னம்பலத்தே) விரும்பி உலவும் பெருமாளே! (பொது - மாதர்கள் உறவாமோ) 601. கிளி என்று ஒப்புமை கூறத்தக்கவராய் மயில் போன்றவராய் உள்ளவர்கள், நடனம் செய்பவர்கள், வாள் (அல்லது அம்பு போன்ற) கண்ணும், நீருண்ட மேகம் போன்ற கூந்தலும் கொண்டு சத்திக்கும் காற் சதங்கை தாள ஒத்துப்போல ஒலிசெயும் பாவை (விக்கிரகம்) எனக் கூறத்தக்கவர், நீலநிறமுள்ள சக்கரவாகப்புள், பொன்குடம், போன்று பால்கொண்ட தாயுள்ள கொங்கை கொண்டு அணைத்து, நல்ல பதுமை போலிருந்து வஞ்சித்துப் (பொருள்) பறிப்பவர்கள், முழுப் பொய்யைப் பரிகாசத்தினாற் சாதிக்கின்ற துக்கந்தரும் கொலைத் தொழிலையும் செய்பவர்கள், (விலைக்குச்) சேர்க்சை கொள்ளும் மாதர்கள் (விலைமாதர்கள்) - அல்லது மாதர் கூட்டம் - (அல்லது அழகிய மாதர்கள்).