பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 35 ஒப்பற்ற மணிவடத்தின் அழகு பெற்ற கொங்கை மலையைச் சுமந்த அதனால் இளைத்து நிற்கும் இடையை உடைய இளமைப் பருவத்தினள்; சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே தவம் செய்து அந்த சிறப்புள்ள படியை கையிற் கொண்டு அறம் இரண்டு எட்டு (16), எட்டு (8), எட்டும் (8) - முப்பத்திரண்டையும் வளர்த்த தலைவி (காமாட்சி தேவி)யின் பங்காளராம் சிவபிரானுக்கு O மெய்ப்பொருளை உபதேசித்த பெருமாளே. (உன் பொறையை என் செப்பிச் செப்புவது) 461. மாமிசமும் நெருங்கிய தோலும் அளந்து வைக்கப்பட்ட கட்டடம் (கூடு) தளர்ந்துபோக, (மயிர்) * வெண்ணிறமுடைய கொக்கு போல நரைத்து, அழகிய தலை, உடம்பு (எல்லாம்) இளைத்துப் போய், எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சியுற்று, இந்திரியம் (ஐம்பொறிகளும் - மெய், வாய், கண், மூக்கு, செவி) இவைகளின் தொழில்கள் மாற்றம் அடைந்து, உணவு), 9 மகப்பெறுவித்தல், 10 மகவு வளர்த்தல், 11. மகப் பால் வார்த்தல் 12. அறவைப் பிணஞ் சுடுதல், 13. அறவைத் துாரியம் (அநாதர்க்கு அளிக்கும் உடை துாரியம் - நல்லாடை) 14. சுண்ணம், 15. நோய்க்கு மருந்து, 16 வண்ணார், 17 நாவிதர், 18. கண்ணாடி, 19. காதோலை, 20. கண் மருந்து, 21. தலைக் கெண்ணெய், 22 பெண் போகம், 23 பிறர்துயர் காத்தல், 24 தண்ணிர்ப் பந்தல், 25 மடம், 26 தடம் 27. சோலை, 28 ஆவுரிஞ்சுதறி, 29 விலங்கிற்கு உணவு, 30. ஏறு விடுத்தல், 31. விலைகொடுத்து உயிர்காத்தல், 32. கன்னிகாதானம். O சத்தியம் - மெய்ப்பொருள் - " யான்தான் எனுஞ்சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" - கந்தர் அலங்-95 ** "தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்து திருப்புகழ் 47