உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 417 சிவசிவ ஹரஹர தேவா! உன்னை வணங்குகின்றேன் வணங்குகின்றேன்; கண்டு களிக்கவேண்டிய மேலான கதிப் பொருளானவனே! உன்னை வணங்குகின்றேன் i i வணங்குகின்றேன்; எத்திசையிலும், எவ்வகைப் புகழிலும் (அல்லது) எந்த இசை ஞானத்திலும், வாழ்பவனே உன்னை வணங்குகின்றேன் - வணங்குகின்றேன்; செஞ்சொல் (இனிய சொற்களைப்) பேசுகின்ற (திரு) வள்ளி நாயகியின் கலவி யின்பத்தைப் பெறுகின்ற மணவாளனே! உன்னை வணங்குகின்றேன் - வணங்குகின்றேன்; திரிபுரங்களை எரித்த தலைவனே! உன்னை வணங்குகின்றேன் வணங்குகின்றேன்; ஜெய ஜெய, ஹரஹர தேவா தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே! (நாயேனை ஆளுவ தெந்த நாளோ!) 612. கட்டி - பிராண வாசியைப் பாழில் ஒடவொட்டாமல் அதன் ஸ்தானத்திற் பிடித்துக்கட்டி, - முண்டக அரபாலி அங்கிதனை - மூலாதார கமலத்துள்ள அருள்பாலிக்குஞ் சிவாக்கினியை, - மூட்டி - மூண்டு எழச்செய்து, - அண்ட மொடு தாவி - அண்டமாகிய கபாலபரியந்தம் தாவச் செய்து, விந்து ஒலி கத்த - விந்து நாதம் தோன்றி முழங்க, - மந்திர அவதான வெண்புரவி மிசை ஏறி - கட்டப்பட்ட கூடத்திற் சாவதானமாக நிற்கும் அச் சுவேதப் புரவியின் மேல் ஆரோகணித் து கற்பக அம் தெருவில் - கற்பகம்போல் விரும்பியவெல்லாம் அளிக்கத்தக்க அழகிய மேலைச் சிவவீதியில் - வீதிகொண்டு - நேராக ஒடச்செலுத்தி, சுடர் பட்டி மண்டபம் - எல்லாத் தத்துவங்களும் ஒன்றுபடும் ஸ்தானமாகிய பிரகாசிக்கின்ற லலாட ஸ்தானமண்டபத்தில் - ஊடாடி - பிரத்தியாகார தாரணை தியானாதிகளைப் பழகி, இந்துவொடு விந்து பிசகாமல் கட்டி - சந்திரகலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக்கட்டி வெண்பொடிகொடு. அந்த வெண்ணிற்றை அணிந்து கொண்டு அசையாமல் - ஸ்தாபரமாக நின்று.