பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 421 (பத்துத் திக்குகளிலும் ஒடும்படி சிவந்த ரத்தத்தை) சிவந்த ரத்தம் பத்துத் திசைகளிலும் ஒடும்படி (எட்டு இரண்டும் உருவாகி) பத்து நாள்கள் உருவத்திருமேனி - போர்க்கோலத் திருமேனி விளங்கப் போரின் பொருட்டுப் பாசறையில் இருந்து, வஞ்சகராம் சூரர்களும், பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்களும் அழியும்படி - வேலாயுதத்தைச் செலுத்தினவனே! செட்டி வடிவெடுத்துத் தேவி (சிவகாமி - தடாதகைப் பிராட்டி (அங்கயற் கண்ணி) அரசாட்சி புரிந்த பதியாகிய மதுரையில், (கட்டு செங்கைவளை) செங்கை வளைக்கட்டை - செவ்விய கையில் வளையல் கட்டுகளைக், (கூறும்) (விலை கூறின) விற்ற, எந்தை சிவபிரானுடைய, உள்ளம் குளிரும்படி அநாதி வண் பொருளை - தனித்த மூலப் பொருளை உபதேசித்தவனே! (பக்கம் 20 கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) it சிவகாமி தன் பதியில் - தேவிக்கு ஆதிக்கஸ்தானமாகிய மதுரையில்: சிவபிரான் வளையல் விற்ற திருவிளையாடல்: தாரு (கா) வனத்திலிருந்த இருடிகளுடைய பத்தினிகளின் கற்பை அளந்து காட்டச் சிவபெருமான் பிக்ஷாடன உருவம் உடையவராகி அவர்கள் எதிரில் தோன்ற அவர்கள் காமாந்தகராய் வளையல் சோர நின்றார்கள். இருடிகள் இக்கோலத்தைக் கண்டு தமது பன்னியர்களை நீங்கள் கற்பு நிலை வழுவி விட்டீர்கள். மதுரையில் வைசியப் பெண்களாக பிறக்கக் கடவீர்கள் சிவபெருமான் உங்களைக் கைதிண்டும்போது இந்தச் சாபம் நீங்கும்" என்றார்கள்; இருடி பத்ணிகள் அவ்வாறு மதுரையிற் பிறந்திருந்தபோது சிவபெருமான் வளையல் செட்டியாய் அந்தப் பெண்களுக்கு வளையல் இட்டு மறைந்தருளினார். மறைந்த பெருமான் யாவரும் காண விண்ணிலே காட்சி அருளினர். செட்டிப் பெண்கள் கருவுற்று வீரமும் புகழும் கொண்ட புதல்வர்களை ஈன்றனர்" X குளிர அநாதி என்று பிரிக்க f