உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 37 தடி கொண்டு திசைதடுமாறி நடக்கும்படியாக தளர்ச்சியை அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய், அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய், அயலாரும் சே சேசே என்று (இகழ)ப், பிள்ளைகளும் சீ சீ சீ என்று (பரிகசிக்க), உடன் தங்கும் (இருக்கும்) பெண்களும் து து தூஎன்று (அவமதிக்க)ப் பார்த்தவுடன் (அவமதித்து) உமிழ்ந்து (துப்பிப்) பிறர் யாவரும் நிந்திக்கத் தக்கதான (இந்த) பிறப்பு இங்கு போதும் போதும்; வெட்சி மலர் அணிந்த ரத்னத்தாலாய தண்டை அணிந்த தாமரைத் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு என்றைய தினம் அருளுவாய். குசை (கடிவாளம்) இட்டு, நன்றாக அங்கவடி சேர்த்து, எட்டுத் திக்கிலும் தாவிச்செல்லும் அந்தப் புத்தியை (ஞானத்தை) விரும்பும் குதிரையைப் பூட்டி, (வேதங்களாகிய குதிரைகளைப் பூட்டி), நெருங்கி நடத்தும் (கதிர்) சூரிய சந்திரர்களாகிய சக்கரம் கொண்ட சிறந்த தேரில் ஏறி, அமர்ந்து, ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்க திரிபுரங்களை எரித்து அடியோடும் அழித்துத் தமது வெற்றியைப் பரப்பிய தலைவர் வணங்கக் கச்சியில் நிற்கும் கதிர்வேலா! பிரமனும் தடைபட்டு நிற்கும்படி - வலிமை வாய்ந்திருந்த மலை (கிரெளஞ்சம்) (வேலாற்) குத்துப்பட்டு விழுந்து அழிய, தெள்ளிய திரைகள் வீசும் கடலையும், கொத்தளத்தையும் (மதிலுறுப்புக்களையும்) தாண்டி உலவிச் சென்று, (பகைவர்களை) எதிர்த்து வென்று சிரம் (அசுரர்களுடைய) தலைகள், அதுங்க - அமுங்கி (நாசமடைய), பொலிவுள்ள கண்கள் = (திசையிட்டு) (திசையில்) பிரமிப்பு அடைய, அன்று அசுரர்களின் நெஞ்சிற் குத்தி, அவர்கள் கையிலிருந்த ரத்தக்கறை கொண்ட வாளாயுதங்கள் சிதறிப் போய்த் தூரத்திற் பொடிபட்டு விழும்படி அவர்களை வெட்டிய பெருமாளே! (தண்டை அரவிந்தத்திற் புக்கடைதற்கென் றருள்வாயே)