பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/456

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 451 ஆய்ந்து இன்பமுற்று அன்பினாலே முன் செய்த வாக்குத் தத்தம் தவறாம்லே, ஒப்பற்ற விண்ணுலகில் வளர்ந்த செல்வி தேவசேனையை மார்பிலே ஆபரணம் போல அணைந்த மணவாளனே! நன்கு விளங்கின தினைவளர் புனத்திலே இருந்த வள்ளிக்கு வேலைக்காரனாய் (காவற்காரனாய்) விளங்கின அழகனே, தில்லை மேலைக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஞானப் போதமும் நீதர வருவாயே) 625. மகரந்தப் பொடிகள் தங்கிய நல்ல மலர்கள் தங்கும் தங்கள் முடியாலே கூந்தலாலும், ஒழுங்குபெற நடக்கும் கிலும்பணிந்த பாதத்தாலும், கரம்கொண்டு தாளம் இடுகின்ற ஒலியாலும், வருபவர்களுடைய மடியைப்பிடித்து தம் வசப்படுத்துவதாலும் - ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனின்களைப் பூசிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல தாறுமாறான பேச்சுக்கள் பேசும் செருக்காலும், அன்ன நடைபோன்ற நடையாலும் - முன்னே தாக்கி மேலெழுந்த கொங்கையாலும் அந்தக் கொங்கை மேல் உள்ள ஆடைப்ாலும், பல மோடி) விதமான (நாணயம்) நேர்மையை (வெளிக்) காட்டும் (விலையாலே மதிப்பினாலே (கெளரவம்). பெருமிதத்தாலும் காம மயக்கம் தருகின்ற மாதர்களின் - (450 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) x வேளைக்காரன் - பாடல் 167-பக்கம் 387 பார்க்க வேளைப்படி உரிய பணியைச் செய்யும் பணியாளன்" எனவும் பொருள்படும். o இந்தப் பாட்டில் முதல் இரண்டு அடிகளில் முடியாலே, அடியாலே, நொடியாலே எனவும் வகையாலே, நகையாலே, மிகையாலே" எனவும் வருகின்ற வழி எதுகைகளின் அழகு கண்டு களிக்கத்தக்கன.

  • விலை - மதிப்பு - விலையுடை அருந்தமிழ் மாலை" சம்பந்தர் 3-4-11.