பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 39 462. குற்றத்துக்கு இடமான தணியாக் கோபம் முதலான பல குற்றங்களைக் கொண்ட மனத்தை உடையவன், தவம் என்பதே இல்லாதவன், கலப்பிலாத உண்மை நிறைந்த அசத்யன் (பொய்யன்), கதியற்றவன் (திக்கற்றவன்), சுழற்சியுறும் குப்பை போல நிற்கின்ற துக்கம் கொண்டவன் பொறுமையில்லாதவன், பலதிறப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகளான எல்லாவற்றையும் பற்றி நின்றும் பற்று இன்றி நிற்கின்ற பொருளான மெய்ப் பொருள்மேல் பற்று கொஞ்சமேனும் இல்லாத பயனலி, பொல்லாதவன்-உனது கரையற்ற (எல்லையில்லாத) அழகிய சொற்புகழாகிய (சொற்களால் அமைந்த புகழ் நூலாகிய) தேவாரத்தை (அல்லது - அழகிய, சொல்லத்தக்க புகழைக்) கற்கும் கலை ஞானம் இல்லாதவன், கட்டைப் புத்தி உடையவன் (மழுங்கின அறிவு உடையவன்), மட்டன் (மூடன்), நற்கதி அடையும் பேறு இல்லாதவன் - இத்தகைய நான் உனது வெட்சிமாலை அணிந்த அழகிய புயமலைகளையும், ஒளி விசும் வேலாயுதத்தையும் கதிர்காமத் தலத்தையும், சக்கரம் (பூமியில் உள்ள), பொற்றையும் (மலைகளையும்). அல்லது சக்ரவாளகிரி யையும்) மற்றுமுள்ள தலங்களையும், அழகு வாய்ந்த கச்சிப்பதியையும், ஆகிய உனது இருப் பிடங்கள் எல்லா வற்றையும், கனவிலும் மறவாது எனது சித்தத்தில் தியானித்துக் கொண்டு உன்னை அடைய மாட்டேனோ!