உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 503 பாம்பு உருவமுள்ள முநிவராகிய பதஞ்சலியும், (வாம்) வாவும் - தாவிச் செல்லும் புலியுருவத்தின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முநிவரும் பொந்தி நின்று எதிரே தரிசிக்கும்படி நடனஞ் செய்கின்ற திருவடிகளை உடைய கூத்தப் பெருமானுடைய (நடராஜருடைய) அழகிய பூங்கொத்துக்களையும், பாதி நிலவையும் குடியுள்ள ஜடா மகுடமாகிய (கனகாபுரியில்) பொன் முறுக்கில் பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே! அழகிய கமுகுமரங்களின் நிறைவு செறிந்துள்ள நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்துள்ள புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற பெருமாளே! (பூம்பத இணைபூண் டுறவாடு தினம் உளதோ) 643. (காலைக்) கதிர் போன்ற திருமேனியின் அழகும், முற்றின ஞான சொரூபமும் (ஞானத்தின் திருவுருவும்), கிரீடம் பொருந்திய திருமுகங்கள் ஆறும், (சுரர்) தேவர்கள் சூட்டின மாலைகளிலிருக்கும் வண்டுகள் பாட, அதனால் (அம் மாலைகளிலிருந்து) (மழலைகதி) - மெதுவான வகையில் - துளித்துளியாகத் தேன் பாய பவளம் போன்ற வாயிதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச அடர்ந்த பவளநிறத்தின் ஒளிபாய, அருமையான (பரிபுரம்) சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாபம் உள்ள மயில்மேல் ஏறி. அடியேனுடைய - நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் பொடிபட்டழிய, (அதைக் கண்டு) தேவர்கள் யாவரும் இவன் ஏதுமற்றவன் (ஒன்றுக்கும் உதவாதவன்) இவனுக்குக் கடவுள் அருள்செய்வது என்ன ஆச்சரியம் என்று (உன்து திருவருளைக் கொண்டர்டிப் பாட நீ எழுந்தருளி வரவேண்டும்.