பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) F, L = திருப்புகழ் உரை 513 (சூடாமணி) தெய்வமணியின் ஒளி விளங்கும் உருவத்தினள், பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாக உடையவள், உமாதேவி அருளிய குழந்தையே! பரிசுத்த மூர்த்தியே! துதித்து வணங்குவோரின் நேயனே. (அன்பனே)! அடியேனுக்கு அமுதம் போல அருமை வாய்ந்த தோழனே! கடப்பமலர் அணியும் பெருமானே! மலர் நிறைந்த கூந்தலை உடைய (வடிவத்தினள்), உருவத்தினள், ஞானாசனத்தை உடையவள், மிக்க அழகி - குறத்தி வள்ளியின் அழகிய மணவாளனே! ஈசனே! ஒப்பற்ற புலியூரில் வாழும் செல்வனே! தேவர் கூட்டத்தை (ஈடேறச் செய்த) வாழ்வித்த புகழைக் கொண்ட பெருமாளே! (எனக்கெதிர் முன் வரவேணும்) 647. மூல கமலத்தில் அங்கியை - மூலாதார கமலத்துள்ள அக்கினியை நாலு சதுரத்த பஞ்ச அறை - நாற்சதுரப் பிரமபீடமாகிய சம்மாரக் கிரமத்தின் அஞ்சாம் வீடாகிய சுவாதிஷ்டானத்திற் செல்லும்படி - மந்திர பந்தியாலே - மந்திர ஒழுங்கினாலே, - நாடியின் நடத்தி சுழிமுனை நாடி மார்க்கத்திற் செலுத்தி. நாரண புரத்தில் விஷ்ணு வீடாகிய மணிபூரகத்தில் உள்ள, இந்துவின் ஊடு - அர்த்த சந்திராகாரமாகிய விஷ்ணுபிடத்தில், உற இணக்கி - பொருந்தச் சேர் த்து-நன்சுடர் நாற நல்லசுடர் தோற்றும்படியாக, இசை நடத்தி, அநாகத முதலிய மற்ற ஸ்தானங்களிலும் இணங்கி நடத்தி, மண்டல சந்தி ஆறில் - அக்கினியாதி மும்மண்டலங்களி லுஞ் சந்தித்துள்ள ஆறாதாரங்களிலும் பொருந்திய