உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 523 அழகுபெற மழுவும் மானும் (திருக்கரத்தில்) ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும் இன்ன இன்ன காரணங்களால் என்று எனக்கு உபதேசித்துப் புலப்படுத்துவதான ஒரு நாள் உண்டா? ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா? இப் பூமியில், அருள் நிறைந்த ஞானவாள் கொண்டு பறிதலையராம் சமணருடைய கூட்டங்களை அழித்த (திருஞான சம்பந்தப்பெருமானாம்) தவமுநியே! இப் பூ யில் உள்ளோர் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேதசாரங்களை அமைத்துப் பாடினவனே! தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரிதா என்னும் சில ஒலிகளுடன் எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் - நெடுநேரம். அகு குகு குகு எனும் ஒலியுடன் “ஆளியின் வாய் போன்ற வாயை உடைய பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவனாடலின்போது உடன் எழுந்து ஆடுகின்ற # காளிகளின் கூட்டமும் நீங்காது உன்னைச்சூழ. (522ஆம் பக்கத் தொடர்ச்சி) - என்றார் பிறிதோரிடத்து பாடல் 1025: பாடல் 84 - பக்கம் 199 - கீழ்க்குறிப்பைப் பார்க்க 0 மறைபாடி . சம்பந்தர்; பாடினது ருக்வேதப் பொருள் தென்னுால் சிவபத்தி ருக்கு ஐயம்போக உரைத்தோன்" கந்தரந்தாதி - 96. இருக்கு மொழிப் பிள்ளையார்" வேதந் தமிழால் விரித்தார் - பெரிய புரா - ஞானசம் - 80, 289. சுருதித் தமிழ்க்கவி'ஆரணகித கவிதை - திருப்புகழ் 280. 1049.

  • ஆளிவாய் அலகைகள் - பகுவாய பேய்கள்" - சம்பந்தர் 2-121.2. பிலவாய் பேய்" - தக்கயாக - 50. வன்பிலத் தொடு வாதுசெய்வாயின." - கலிங்கத்துப் பரணி 6.3.

廿 அலகைகளுடன் அரன் ஆடுதல் - பேய்க்கணஞ் சூழ ஆடும்" சம்பந்தர் -1-77-3 காளி காணி ஆடல் கொண்டான்' - சம்பந்தர் 3-56.3.