உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 529 652. (மதியம்) சந்திரனது உதவியைக் கொள்ளும் (மண்ணின் குணம் அஞ்சு) மண்ணின் குணம் ஐந்தாகும்; அது (அந்த மண்மண்டலம்) நால்முகம் - நாற்கோண வடிவினது); பஞ்சாட்சரத்தில் ந கரத்தையும், ('ந' என்னும் எழுத்தையும்), பஞ்சகலைகளில் முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது. கங்கை - நீர் (அப்பு மண்டலம்) நான்கு குணம் கொண்டது. இது பஞ்சாசுடிரத்தில் "ம" என்னும் எழுத்தைக் குறிக்கும்; (முன்) அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாக்ஷரத்தில் "சி" - சி கரம் என்னும் எழுத்தைக் குறிக்கும்; (மூணிடை) தங்கு கோணம் - இந்த அக்கினி மண்டலம் மூன்று குணமும் முக்கோணமும் கொண்டது. நகரம்: 'நமசிவய' என்னும் ஐந்தெழுத்தில் "மண்" நகரம் ஆகும். ஐந்தெழுத்தால் இறைவன் பிருதிவி ஆதிய ஐந்து பூதங்களையும் படைத்தனன் ஆதலின் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தும் பிருதிவி ஆதிய ஐந்து பூதங்களைப் படைத்ததாகும். - அஞ்செழுத்தாலைந்து பூதம் படைத்தனன்" - திருமந்திரம் . 966 ஐம்பூதத்துக்கும் ஐந்தெழுத்துக்கும் உள்ள சம்பந்தமும் ஆறாதார விளக்கமும் அநுபந்தத்திற் காண்க - பாடல் 220 பக்கம் 56-ம் காண்க. 1 கங்கை அப்பு மண்டலம் (நீர்) - நால்குணம் - அவைதாம் சத்தம், பரிசம், உருவம், இரதம் புனலுக்கு ஒழுகுதலைத் தெரிவிப்பதாகிய சளசள' ஒலியும், தட்பப் பரிசமும், வெண்மை நிறமும், உருவமும்) தித்திப்புச் சுவையும் உண்டு (சிவஞான பாடியம் - பக்கம் - 261) மகரம்: நீரானது ஐந்தெழுத்தில் "ம" "ம கரம்" ஆகும். # அங்கி (தேயு மண்டலம் - தி) ஐந்தெழுத்தில் "தி சி கரம்; இது மூன்று கோணமாய் விளங்கும்" ("அனல் முக்கோணம்" உண்மை விளக்கம் - 4) முக்குணம் உடையது. அவைதாம் . சத்தம், பரிசம், உருவம், தேயுவுக்கு எரிதலைத் தெரிவிப்பதாகிய தமதம ஒலியும், வெப்பப் பரிசமும், ஒளி நிறமும் உண்டு (சிவஞான பாடியம் - பக்கம் - 261)

  • நிவர்த்தி ΕΗΤΙΚΗ) == ஆன்மாக்களைப் பாசத்தினின்றும் விடுவிப்பதாகிய கலை - ஏனைய நாலுகலைகள் பக்கம் 545 பார்க்க