உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 652. பரம்பொருளைச் சேர தனன தந்தன தந்த தானன தனண தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தந்ததான

  • மதிய மண்குண மஞ்சு நால்முக

நகர முன்கலை fகங்கை நால்குன மகர முன்சிக ரங்கி முனிடை தங்குகோண.

  • மதி - மண்ணுக்கு உதவுவது:

"மண்ணில் ஒண் பைங்கூழ் வளர்ப்பது உன் இடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண்" மீனாட்சி பிள்ளை - அம்புலி 5 சந்திரன் ஸஸ்யாதிபதி (தானியாதிபதி) ஆதலின் பைங்கூழை வளர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மன் குணம் அஞ்சு (ஐந்து): அவைதாம் - சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் (ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) கடினத்தைத் தெரிவிப்பதாகிய கடகட" சத்தமும் (ஒலியும்), தட்பமும் வெப்பமும் இல்லாத பரிச குணமும், வெண்மை முதற் பல நிறமும் (உருவமும்), அறுவகைச் சுவையும் (கந்தமும்), புடவி (பூமி)க்கு உண்டு; (சிவஞான பாடியம் - பக்கம் 261) (மண் - நால்முகம்) - பிருதிவி மண்டலம் - நாற்கோணமாய் வியாபித்திருக்கும். "நாற்கோணம் பூமி" (உண்மை விளக்கம் 4) முன்கலை - கலைகளுள் முதற்கலையான நிவ்ருத்தி கலா ரூபமாய் பிருதிவி வியாபித்திருக்கும். (கிரியா க்ரம ஜ்யோதி வியாக்யாநம் பக்கம் 73) புடவி தத்துவத்தை அடக்கி நிற்பது நிவிர்த்திகலை சிவஞானபாடியம் பக்கம் –292, (527ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி.) கண்ட சிவகோசரியார் பெரு வியப்பு அடைந்து கண்ணப்பரது அன்பையும் இறைவன் திருவருளையும் நினைந்து நினைந்து உருகினார். இறைவனுக்கு அன்பே வேண்டுவது என்னும் உண்மையைக் கண்ணப்ப ரால் அறிந்தனர். என்பது வரலாறு. இவ் வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்திற் காண்க "வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம் காய் கணையி னாலிடந் திசண்டி கூடுகா ளத்திமலையே" - சம்பந்தர் - 3-69-1, திருப்புகழ் 668, 1210-ம் பார்க்க