உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 531 (மதனம்) அழித்தல் வன்மையை (முன்தரி) தன் முன்னே. தன்னிடத்தே (தரி) கொண்டுள்ள, (சண்ட மாருதம்) பெருங்காற்று - அதாவது வாயுமண்டலம் இரண்டு குணத்தைப் பெற்றதாய், (அஞ்செலோர்தெரு) அஞ்சு + எல் ஒர் + தெரு அல்லது அஞ்சு - செல் - ஒர் தெரு) ஐந்துடன் சேர்கின்ற ஒன்று - அதாவது - ஆறு - தெரு - (கோணம் குறுந்தெரு) எல் அஞ்சு ஓர் தெரு ஒளி பொருந்திய ஆறு கோணம் - வாயுமண்டலம் ஆறு கோண வடிவினது - "வ"கரம் பஞ்சாக்ஷரத்தில் "வ" என்னும் எழுத்தைக் குறிக்கும்; மிஞ்சி - மிகுந்து, (அகன்படா) அகன்று பட்டுள்ள - விரிந்துள்ள, (கம்) ஆகாயம், ஒர் ஒப்பற்ற, ஒன்று ஒரு குணத்தைச் சேரும்) கொண்டதாகும்; (இந்த ஆகாய மணடலம்) (கதிரடங்கிய) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான, (அண்டகோளகை) அண்ட உருண்டையாம் - எனவே இம் மண்டலம் வட்ட வடிவினதாம் - இதைப் பஞ்சாகூடிரத்தில் "ய" கரம் "ய" என்னும் எழுத்து நின்று விளக்கும்; (ரண்டு கால்மிசை) ரேசகம், பூரகம் என்னும் இரண்டு (கால்) வழி கொண்டு, (ககனம் மின் (அல்லது இன்) சுழி) - அண்டமாகிய ஒளி கொண்ட (சுழி) உச்சி கபாலபரியந்தம், (ரண்டு கால்; பரி - கந்து பாயும்). இடைகலை, பிங்கலை என்னும் (கால்) நடையுள்ள இரண்டு குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்); (அவைதமை வசப்படுத்த) x கருணை இந்திரியங்கள் சோதிய - இந்திரியங்களின் ஒடுக்கத்தால் (கருணை) அருள்சோ தி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், (அக்கினி மண்டலம்) கிய மும்மண்டலங்களிற் பொருந்தியுள்ள மூர்த்திகள் (கதிகொள் பிரசன்னமாகும் (யந்திர) மந்திர சக்தியால் (நான்) O(விந்துநாதமொடு) லிங்காகார சிவத்துடன் என்று சேர்வேன்! X கருணை இந்திரியங்கள் சோதிப் (கருணை - அருள்) ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே" - திருமந்திரம் 2035. O விந்துநாதம் - லிங்காகார சிவம் - விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் - திருப்புகழ் 100 பக்கம் 235 கீழ்க்குறிப்பு.