உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திலத மதிமுக அழகி மரகத வடிவி பரிபுர நடனி 'மலர்பத tசித்தர்க் குக் குறி வைத்திட் டத்தன முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர சிவைகெள்ள் xதிருசர சுவதி Oவெகுவித சொருபி *முதுவிய கிழவி யியல்கொடு ttசெட்டிக் குச்சுக முற்றத் தத்துவ சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு திரையி லமுதென மொழிசெய் கவுரியி னரிய மகனெண் புகழ்பு லிநகரில் செப்புப் பொற்றன முற்றப் பொற்குற தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய பெருமாளே. (64)

  • மலர் பதம் - மலர்மிசை ஏகினான்' என வரும் திருக்குறளுக்குப் (3) பரிமேலழகர் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவொடு விரைந்து சேறலின்" என எழுதியுள்ள உரை ஈண்டு கவனிக்கற்பாலது அடியார்களுடைய குவிந்த உள்ளக் கமலத்தை மலர்த்தும் பதம் எனவும் பொருள் காண்பர். t சித்தர் ...பாட்டு 355 பக்கம் 398 பாட்டு 582-பக்கம் 330 கீழ்க்குறிப்பைப் பார்க்க
  1. குறிவைத்திட்ட தனம் - இது காமாகூரியின் முலைத்தழும்பை ஏகாம்பரநாதர் பெற்ற வரலாற்றைக் குறிக்கும் பாடல் 463 பக்கம் # கீழ்க்குறிப்பைப் பார்க்க தேவியின் வளைத்தழும்பையும் கொங்கைத் தழும்பையும் இறைவன் பெற்றதை - மணிமுலைக் குவட்டினோடு வளைக்க்ையால் நெருக்கிப் புல்லித் தணிவருங் காதல் விம்மக் காதலி தழுவலோடுந் திணியிருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து கட்டி அணிவளைத் தழும்பினோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர்" "குற்றவர் உணர்வையும் கடந்த பேரொளி " தேவி வால்வளைப் பொற்றழும்பொடு முலைச் சுவடு பூண்டதே" - காஞ்சிப்புராணம் - தழுவக் 380.381 "சுரிகுழல் மடந்தை துண்ை முலைக் கண்கள் தோய் சுவடு.திருவாசகம் அருட்பத்து 'கொழும் பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கையினை அமர் பொருது கோலங்கொண்ட தழும்புளவே"...அப்பர் 6-10

X திரு சரசுவதி கொள். சொருபி:- திருவைத் தவளச் சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மடப்பிடியே'.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். முத்த-10, திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப் பெருமகள் நுதற்கனாகப் பெற்று வான் செல்வங் கல்வி, அருமை வீடளிப்பாள்...திருவிளை. 192 (தொடர்ச்சி பக்கம் -541)